தென்னிந்தியாவை நோக்கி பூனேவில் இருந்து புறப்பட்ட Trupti Hanumanth Bhoslae!
பூனே பூர்வீகமாகக் கொண்டவர் திருப்தி ஹனுமத் போஸ்லே.. இவரது பெற்றோர் அரசாங்க அதிகாரிகள்.. இவரது சகோதரர் மாவட்ட கலெக்டராக பதவி வகித்து வருகிறார்..
பிசிஏ முடித்த இவர் நடிப்புக்கான பயிற்சியை பூனேயில் பெற்று வருகிறார்.. இதில் ஆக்டிங் ஆக்சன் மற்றும் அனைத்து கலைகளையும் பயின்று வருகிறார்.
நடிகர் அல்லு அர்ஜுனின் தெலுங்கு படங்களை பார்த்தபோது இவருக்குள் ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டு சினிமாவில் தானும் சாதிக்க வேண்டும் என்ற உணர்வோடு சினிமா மீது காதல் கொண்டு தென்னிந்திய படங்கள் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்..
அல்லு அர்ஜுன் ஒரு ஷூட்டிக்கு சென்ற போது இவரது நடிப்பு பயிற்சி மையத்திற்கு வந்திருந்தாராம்.. அப்போது அல்லு அர்ஜனை பார்த்த அவருடன் பேசியது தன் வாழ்விலும் மறக்க முடியாது என்கிறார்.
முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது தீராத வெறியாம்..
இவரது தந்தை ரஜினி ரசிகராம்.. தந்தையைப் போலவே இவரும் ரஜினி படங்களை நிறைய பார்த்திருக்கிறாராம்.
தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா மற்றும் சமந்தாவை இவருக்கு ரொம்ப பிடிக்கும்.. என்னதான் நயன்தாரா தன்னுடைய ரோல் மாடல் என்று சொன்னாலும் ப்ரொமோஷனுக்கு வருவது ஒரு நடிகையின் கடமையாகும் என்கிறார்.. தானும் எவ்வளவு உயரத்தில் சென்றாலும் ப்ரமோஷனுக்கு வருவேன் என்பதையும் பிடிவாதமாக சொல்கிறார்..
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் இவரது என்பதை இவரது விருப்பம்.. அதுமட்டுமில்லாமல் ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்க இவருக்கு ஆர்வம் அதிகம்.. எனவேதான் ஆக்ஷன் பயிற்சியும் பெற்று வருகிறாராம்.
முதலில் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தாலும் தமிழில் தற்போது வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். பிரபல முன்னணி நிறுவன படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளது..
தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் அதை வெளியே சொல்ல மறுக்கிறார். இந்த புதுமுக நடிகை திருப்தி ஹனுமத் போஸ்லே.
சென்னைக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் சில தமிழ் வார்த்தைகளும் கற்று இருக்கிறார். முக்கியமாக எப்படி இருக்கீங்க? வணக்கம்.. நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா? என்ன பண்றீங்க? என்ற வார்த்தைகளை அழகு தமிழில் பேசி காட்டினார்..
அழகும் திறமையும் நிறைந்த இவருக்கு தமிழ் சினிமா நல்ல வழி காட்டாதா என்ன.?
வாழ்த்துக்கள் திருப்தி ஹனுமத் போஸ்லே..
கருத்துகள் இல்லை