சற்று முன்

அகமொழி விழிகள்” திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா ! | Manipal Academy of Higher Education to Unveil Manipal Hospice and Respite Centre ! | சுமோ திரை விமர்சனம் ! | நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'ஹிட் - தி தேர்ட் கேஸ்' ( HIT - The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! | நடிகர் அஜித் அவர்களை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஷால் ! | The Organic World expands its footprint, launches in Coimbatore ! | HDFC LIFE மார்ச் அன்று முடிவடைந்த பன்னிரண்டு மாதங்களுக்கான நிதியியல் செயல்திறன் ! | ஹெர்பாலைஃப் இந்தியா ஆனது ஸ்லீப் என்ஹான்ஸ்TM ஐ அறிமுகப்படுத்தியுள்ளது ! | வல்லமை திரை விமர்சனம் ! | ராயபுரம் செயற்குழு உறுப்பினர் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் ! | சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும் அன்டில் டான் (Until Dawn) ! | TOM CRUISE’S MISSION: IMPOSSIBLE – THE FINAL RECKONING TO RELEASE EARLY IN INDIA ON 17TH MAY 2025 (SATURDAY) ! | Chennai Becomes the Hub of Direct Selling Dialogue as FDSA Showcases Industry Growth and Women’s Role ! | இந்தியாவின் ₹26,000 கோடி நேரடி விற்பனைத் துறையில் தமிழ்நாடு முன்னிலை என நேரடி விற்பனை சங்கங்களின் கூட்டமைப்பு தகவல் ! | டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு ! | கேங்கர்ஸ்’ – நகைச்சுவை அதிரடி ஒன்றாக இணைக்கும் கலர்‑புல் கேட்டிதனம் திரை விமர்சனம் ! | Samsung Launches Second Edition of Walk-a-thon India, Three Lucky Winners to Get Galaxy Watch Ultra ! | Farmer: KS Balachandran, Pollachi, TN A Life Rooted in the Soil – Story of KS Balachandran ! | Chennai gets its first O-ARM with Navigation system for advanced brain, spine and orthopaedic surgeries at Kauvery Hospital ! | மூளை முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக காவேரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனம் ! | HDFC Bank Parivartan covers 298 border villages under rural development initiatives ! | Kapil Sharma and Anurag Kashyap Bring the Banter in Sprite’s Funniest Season Yet ! | Escape to the Hills: Marriott’s Dreamiest Mountain Getaways ! | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஏப்ரல் 24 முதல், ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது ! | Turkish Airlines Celebrates a New Era in European Aviation !


ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் #HK15 !


ஹரீஷ் கல்யாண்  நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் #HK15 !

*ஹரீஷ் கல்யாணின் #HK15 பட அறிவிப்பு போஸ்டர் வெளியானது !!*

IDAA PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது. 

வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாப்பத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். 

வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். IDAA PRODUCTIONS  பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு,  இன்னும் சில தினங்களில் முழுமையாக முடிவடையவுள்ளது. விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கவுள்ளது.  

இரத்தம் தெறிக்க ஹரீஷ் கல்யாணின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

தொழில் நுட்ப குழு விபரம் :

தயாரிப்பு : IDAA PRODUCTIONS 

இயக்கம் : வினீத் வரபிரசாத் 

ஒளிப்பதிவு : கார்த்திக் அசோகன்

இசையமைப்பாளர்: பிரிட்டோ மைக்கேல்

எடிட்டர்: மதன் ஜி 

நடனம்: பாபா பாஸ்கர்

மக்கள் தொடர்பு : Aim சதீஷ், சிவா


கருத்துகள் இல்லை