IMG-20250409-WA0508

 

சற்று முன்

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும்"பேடிங்டன் இன் பெரு" ! | மிஸ் மேல கிரஷ் ' வீடியோ ஆல்பம் வெளியீடு ! | சென்னையில் நீரிழிவு நோயின் பரவல்: ஆய்வு தரவுகளை வெளியிட்ட காவேரி மருத்துவமனை ! | Kauvery Hospital releases data on the Diabetes Prevalence in Chennai through a cross sectional study ! | ஏலேலோ இசை ஆல்பம் ட்ரீம்ஸ் வெளியீட்டு விழா ! | ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் #HK15 ! | Samsung Announces Special Offers on Galaxy S25 Ultra in India ! | நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது ! | தாயின் பெருமை சொல்லும் “அம் ஆ” படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி! | யோகிபாபு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது ! | Samsung Celebrates India’s Spring Festivities with the Bespoke AI Festival on Smart Digital Appliances ! | Samsung Galaxy Tab S10FE Series Goes on Sale in India with Exciting Introductory Offers ! | New Initiative Uses Behavioural Science to Encourage Bengaluru Metro Adoption ! | சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரொமோ வெளியீடு ! | Mobil 1™ and Red Bull bring the spirit of high-performance motorsports to the streets ! | முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்ட ஆரி அர்ஜுனனின் “4த் ஃப்ளோர்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் ! | நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே பியார் கியா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! | மக்கள் பணியே மகத்தான பணி புரட்சி தளபதி விஷால் ! | தென்னிந்தியாவை நோக்கி பூனேவில் இருந்து புறப்பட்ட Trupti Hanumanth Bhoslae! | Motan Expanded in India to Support Growing Plastics Industry Demands ! | சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள் ! | குட் பேட் அக்லி திரை விமர்சனம் ! | Samsung to Outpace Industry Growth in AC Segment in India ! | Tata Motors Group global wholesales at 3,66,177 in Q4 FY25 ! | PhysicsWallah (PW) Expands into Tamil Nadu with Three Tech-Enabled Offline Vidyapeeth Centres in Chennai !


சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள் !

IMG-20250411-WA0280

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள் !

IMG-20250411-WA0276

பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்! 

இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் இந்திய திரைவானின் உச்சநட்சத்திரமான கமல்ஹாசன். 

இந்தச் சந்திப்பைக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன், 

சினிமா தொடங்கி கணினித் துறை வரை உபகரணங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால், அடுத்து என்ன என்கிற நமது தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘ஒரு சமயத்தில் ஒரு கேள்வி’ என்ற முறையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கவிருக்கும் அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. க்யூரியாசிடி கில்ஸ் த கேட் என்று ஆங்கிலத்தில் ஒரு மரபுத் தொடர் உண்டு. ஆனால், இங்கே க்யூரியாசிடி பூனையைக் கொல்லவில்லை; அரவிந்த் ஸ்ரீநிவாஸை உருவாக்கியிருக்கிறது! என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். 

*அரவிந்த் ஶ்ரீநிவாஸ் ட்வீட்*

கமல்ஹாசன் அவர்களுடனான சந்திப்பைப் பற்றி, பெர்ப்லெக்ஸிடி தலைமைச் செயலதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிடும்போது, “பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்னும் கற்பதிலும், அசுரத்தனமாக வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தை திரைப்பட உருவாக்கத்தில் இணைத்துக்கொள்வதிலும் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் பிறருக்கு முன்னுதாரணமானது. நீங்கள் இப்போது பணியாற்றிவரும் ‘தக் லைஃப்’ திரைப்படமும், அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


கருத்துகள் இல்லை

 

.com/img/a/