ஜோயாலுக்காஸ் அறிமுகப்படுத்தும் கிருஷ்ண லீலா கலெக்ஷன் !
ஜோயாலுக்காஸ் அறிமுகப்படுத்தும் கிருஷ்ண லீலா கலெக்ஷன் !
பகவான் கிருஷ்ணரின் விளையாட்டுத்தனமான தெய்வீக அழகின் உத்வேகத்தில் அமைந்த பிரைடல் கலெக்ஷன்கள்
சென்னை, ஏப்ரல் 5, 2025: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது சமீபத்திய படைப்பான 'கிருஷ்ணா லீலா பிரைடல் கலெக்ஷன்-ஐ' அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த தொகுப்பு கிருஷ்ணரின் மயக்கும் கதைகளிலிருந்து உத்வேகம் பெற்று, நமது புராணங்களையும் கலைத் திறனையும் இணைத்திடும் நேர்த்தியான படைப்பாக உருவெடுத்துள்ளது.
கிருஷ்ண லீலா என்பது கிருஷ்ணரின் கதைகளில் பொதிந்துள்ள கவர்ச்சிகரமான விளையாட்டுத்தனம் , பேரறிவு கொண்ட அன்பு மற்றும் தெய்வீக அழகு இவற்றுக்கு பெருமை செலுத்தும் எங்களின் புதிய ஒரு முயற்சி. இந்த அற்புதமான கலெக்ஷனின் ஒவ்வொரு பகுதியும் பண்டைய கோயில் நகைகளின் அழகை தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது, பழமையான நுட்பங்களைப் பயன்படுத்தி திறமையான கைவினை கலைஞர்கள் உதவியுடன் உயிர்ப்பிக்கப்பட்டது.
பாரம்பரியம் மற்றும் பேரழகு இரண்டின் சரியான கலவையைத் தேடும் மணப் பெண்கள் தங்கள் கனவுகளை அலங்கரிக்கப்பட்ட இந்த வடிவமைப்புகளில் நிஜமாக காண்பார்கள்.
'கிருஷ்ணா லீலா' பிரைடல் கலெக்ஷனின் பிரமாண்டமான வெளியீடு ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை தி. நகர், பிரசாந்த் கோல்ட் டவரில் நடைபெறும். இந்த நிகழ்வு ஒரு தெய்வீக கலைத்திறனின் கொண்டாட்டத்தை உறுதி செய்வதாக இருக்கும். பங்கேற்கும் விருந்தினர்களுக்கு தலைசிறந்த கலை படைப்புகளைப் பற்றிய புதியதொரு கண்ணோட்டத்தை வழங்கும்.
ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜோய் ஆலுக்காஸ், இந்த வெளியீடு குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். "கிருஷ்ண லீலா தொகுப்பு பாரம்பரியம் மற்றும் பக்தியின் நித்திய வசீகரத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஒரு சின்னமாகும். இந்த கலெக்ஷனின் ஒவ்வொரு நுட்பமான வடிவமைப்பிலும் கிருஷ்ணரின் காலம் வென்ற அற்புத கதைகளின் அம்சங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்றைய மணப்பெண்கள் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அணியக்கூடிய பாரம்பரியத்தின் கொண்டாட்டம் இது. கிருஷ்ண லீலாவின் பிரம்மாண்டத்தை அனுபவிக்கவும், இந்த சிறப்பு வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்கவும் அனைவரையும் அழைக்கிறோம் " என்று தெரிவித்தார்.
கிருஷ்ணா லீலா பிரைடல் கலெக்ஷன் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜோய்ஆலுக்காஸ் ஷோரூம்களிலும் கிடைக்கும். அழகையும், கலாச்சார சிறப்பையும் தேடும் மணமகளுக்கான சிறந்த தேர்வாக அதிக அளவிலான வியப்பூட்டும் வடிவமைப்புகளுடன் இந்த கலெக்ஷன்கள் வெளிவருகிறது.
கருத்துகள் இல்லை