மார்வெல் ஸ்டுடியோஸ் தண்டர்போல்ட்ஸ் டிரெய்லரை வெளியிட்டது !
மார்வெல் ஸ்டுடியோஸ் தண்டர்போல்ட்ஸ் டிரெய்லரை வெளியிட்டது - இந்தத் திரைப்படம் மே 1 ஆம் தேதி அமெரிக்க வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக இந்திய திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது !
மிக உயர்ந்த குறியிலக்கை நோக்கி அதிரடியாக பயணிக்க மிகவும் எதிர்பாராத ஒரு அணி- சேர்ந்துள்ளது .... நீங்கள் தயாராக இருக்கிறீர்களா ???
டிரெய்லர் இணைப்பு: xx
யார் ஒருவரும் தைரியமாக மேற்கொள்ளத் தயங்கும் ஆபத்து நிறைந்த ஒரு பயணத்தை மேற்கொள்ள ஒன்றிணையும் ஒரு ஆன்டி ஹீரோக்களின் கரடுமுரடான அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரில்லரான தண்டர்போல்ட்ஸ்* படத்தின் முதல் டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. முன்னெப்போதுமில்லாத வகையில் நினைத்துப் பார்க்கவே முடியாத இணைவதற்கான சாத்தியக் கூறே இல்லாத ஒரு பொருத்தமற்ற அதிரடி சாகச கும்பல் ஆபத்து நிறைந்த ஒரு பயணத்தை மேற்கொள்ள இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அதைக் காண தயாராகுங்கள்
இந்தப் திரைப்படத்தில் ஃப்ளோரன்ஸ் ப்யூக், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், வயட் ரஸ்ஸல், ஓல்கா குரிலென்கோ, லூயிஸ் புல்மேன், ஜெரால்டின் விஸ்வநாதன், கிறிஸ் பாயர், வெண்டெல் எட்வர்ட் பியர்ஸ், டேவிட் ஹார்பர், ஆகியோருடன் ஹன்னா ஜான்-காமென் மற்றும் ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜேக் ஷ்ரேயர் இயக்கத்தில் உருவான தண்டர்போல்ட்ஸ்* திரைப்படத்தை கெவின் ஃபைஜ் தயாரித்துள்ளார். லூயிஸ் டி'ஸ்போசிட்டோ, பிரைன் சாபெக் மற்றும் ஜேசன் தாமேஸ் ஆகியோர் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர்களாக செயல்பட்டுள்ளனர் .
தண்டர்போல்ட்ஸ்* திரைப்படத்தை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மே 1, 2025 அன்று தனிப்பாட்டு திரையரங்குகளில் மட்டுமே மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.
கருத்துகள் இல்லை