சிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு சிறுநீரக ஓட்ட நிகழ்வின் 3வது பதிப்பை நடத்திய AINU சென்னை மருத்துவமனை !
சிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு சிறுநீரக ஓட்ட நிகழ்வின் 3வது பதிப்பை நடத்திய AINU சென்னை மருத்துவமனை !
விழிப்புணர்வை பரப்புவதற்கான இந்த 5 கி.மீ தூர ஓட்ட நிகழ்வு ஆல்காட் நினைவு மேனிலைப் பள்ளியிலிருந்து தொடங்கியது
சென்னை,ஏப்ரல் 6, 2025: சமூக உணர்வு மற்றும் சுகாதார விழிப்புணர்வு மீதான அர்ப்பணிப்பின் ஒரு நேர்த்தியான வெளிப்பாடாக ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூராலஜி (AINU), சென்னை 5 கி.மீ தூரத்திற்கான சிறுநீரக ஓட்ட நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறது. இதில் பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் உற்சாகத்தோடு பங்கேற்றனர். சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக பாதிப்பு வராதவாறு எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த சிறுநீரக ஓட்ட நிகழ்வின் நோக்கமாகும். சென்னை, ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெப்ராலஜி அண்ட் யூராலஜி 5 கி.மீ. தூர ஓட்டத்தை உள்ளடக்கிய இந்நிகழ்வை 3வது பதிப்பாக இந்த ஆண்டு நடத்துகிறது. ஆல்காட் நினைவு மேனிலைப் பள்ளியில் இருந்து இது தொடங்கிய இந்நிகழ்வில் 600 - க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இஇயக்குனர் டாக்டர். எம். ரவி ஐபிஎஸ், பிரபல திரைப்பட இயக்குனர், திரு. கே.எஸ். ரவிக்குமார், சிறுநீரகத் துறையின் தலைமை நிபுணரும், ரோபோட்டிக் அறுவைசிகிச்சையாளரும், சிறுநீரக புற்றுநோயியல் வல்லுனருமான டாக்டர். அருண் குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்து, விழிப்புணர்விற்கான இந்த ஓட்ட நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சோம்பலற்ற சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளையும், நீரேற்ற செயல்பாட்டையும் மற்றும் கவனமான உணவுத் தேர்வுகளையும் இந்த விழிப்புணர்வு ஓட்ட நிகழ்வு ஊக்குவித்தது; அதே வேளையில், நமது பொதுவான நல்வாழ்வைப் பாதுகாப்பதில் சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியப் பங்கை இது முன்னிலைப்படுத்தியது.
தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் டிஜிபி டாக்டர் . எம். ரவி ஐபிஎஸ் இந்நிகழ்வில் பேசுகையில், “சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த நம்பிக்கையையும், மீண்டு குணம்பெற முடியும் என்ற வலுவான செய்தியையும் வழங்கும் நிகழ்வாக இது அமைந்திருக்கிறது. உடற்பயிற்சி மற்றும் உடலுழைப்பை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிறுநீரக ஆரோக்கியம் குறித்த முக்கியமான விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில், அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் இந்த ஓட்ட நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்றிருப்பது நிச்சயமாக பாராட்டுக்குரியது.” என்று கூறினார்.
சிறுநீரகத் துறையின் தலைமை நிபுணரும், ரோபோட்டிக் அறுவைசிகிச்சையாளரும், சிறுநீரக புற்றுநோயியல் வல்லுனருமான டாக்டர். அருண் குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில், "பொதுமக்களின் இத்தகைய உற்சாகமான பங்கேற்பைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்; உத்வேகத்தையும், உற்சாகத்தையும் இது எங்களுக்குத் தந்திருக்கிறது. ஒட்டுமொத்த நலவாழ்வின் ஒரு முக்கிய அம்சமான சிறுநீரக ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக எண்ணிக்கையிலான தனிநபர்கள் ஒன்றிணைந்திருப்பது பெருமிதம் அளிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க சிறுநீரக ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. சுறுசுறுப்பாகவும், நீரேற்றத்துடனும், நமது உணவுத் தேர்வுகளில் கவனமாகவும் இருப்பதன் மூலம், நாம் நமது சிறுநீரகங்களின் நல்ல செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கலாம்; அத்துடன், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உயிர்சக்திக்கும் பங்களிப்பை இதன்மூலம் நாம் வழங்க முடியும். சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவதிலும், அனைவருக்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்குவதிலும் இதே உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் நமது பயணத்தை நாம் தொடர வேண்டும்.” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் திரு. கே.எஸ். ரவிக்குமார், "சமூகத்தில் உள்ள அனைவருக்கும், அனைத்து வயதினருக்கும் சமச்சீரான, ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம்; மேலும் இதுபோன்ற முன்னெடுப்புகள் மூலம் உடற்பயிற்சியையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் மேற்கொள்வதை ஊக்குவிக்க இது சரியான நேரம். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஒருவரையொருவர் நாம் ஊக்குவிப்போம்; மேலும் சிறுநீரக நோயுடன் போராடுபவர்களுக்கு அவர்கள் இந்த பயணத்தில் தனியாக இல்லை; நாங்கள் அனைவருமே ஆதரவாக இருக்கிறோம் என்பதை நினைவூட்டி நம்பிக்கையளிப்போம்." என்றார்.
சிறுநீரக பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளை அதாவது சிறுநீரக நிபுணர்களை சந்தித்து, ஆலோசனையையும், சிகிச்சையையும் பெறுவதற்கான வசதி மற்றும் சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வில் நிலவும் இடைவெளிகள் போன்றவற்றை விவாதிப்பதற்கான ஒரு வலுவான தளத்தை இந்த நிகழ்வு வழங்கியது. சிறுநீரக ஆரோக்கியத்தை பொது சுகாதாரக் கொள்கைகளில் இணைப்பதன் மூலம், நோயாளியின் நலனை மையமாக கொண்ட அணுகுமுறைகளை ஊக்குவிக்க முடியும் மற்றும் சிறுநீரக ஆரோக்கிய அறிவையும், பராமரிப்பையும் பெரிதும் மேம்படுத்த இயலும் என்று இம்மருத்துவமனை நம்புகிறது.
கருத்துகள் இல்லை