சற்று முன்

Chennai gets its first O-ARM with Navigation system for advanced brain, spine and orthopaedic surgeries at Kauvery Hospital ! | மூளை முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக காவேரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனம் ! | HDFC Bank Parivartan covers 298 border villages under rural development initiatives ! | Kapil Sharma and Anurag Kashyap Bring the Banter in Sprite’s Funniest Season Yet ! | Escape to the Hills: Marriott’s Dreamiest Mountain Getaways ! | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் ஏப்ரல் 24 முதல், ப்ளாக்பஸ்டர் “எம்புரான்” திரைப்படம் ஸ்ட்ரீமாகிறது ! | Turkish Airlines Celebrates a New Era in European Aviation ! | Welfare assistance on behalf of the Indian National Congress movement | SRMIST Celebrates 14th Research Day and 6th Dr. Paarivendhar Research Colloquium with Grand Recognition of Academic Excellence ! | எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி ! | தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், 'குபேரா ! | Toyota Kirloskar Motor Enhances Education and Healthcare Infrastructure in Raichur under its CSR Prog ! | Marriott Hotels Debuts in Udaipur, Blending Timeless Charm, Cultural Heritage and Contemporary Elegance at Udaipur Marriott Hotel ! | ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி ! | Samsung Launches Galaxy M56 5G, Segment’s Slimmest Smartphone in India ! | குபேரா'வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியிடப்பட்டது ! | டால்மியா பாரத் அறக்கட்டளை 77 DIKSHa யிற்சியாளர்களுக்கான பாராட்டு விழாவை டால்மியாபுரத்தில் ஏற்பாடு செய்துள்ளது ! | கலியுகம் பட வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார் கலைப்புலி S தாணு ! | விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) திரைப்படம்,மே மாதம் 23 ஆம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது ! | தக் லைஃப் - முதல் பாடலை கமல் ஹாசன், மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிலம்பரசன் டி.ஆர், மற்றும் த்ரிஷா வெளியிட்டார்கள் ! | 20 - ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சச்சின் ! | முதலாளித்துவ அடிப்படையில் விஜய் செயல்படுகின்றார்* - இந்திய சுயராஜ்ய கட்சி தலைவர் ராம்குமார் ஆவேசம் ! | சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா ! | கேங்கர்ஸ்” பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி ! | 45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !


நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது !

நடிகர் சூரியின்  “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது ! 

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க,  விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.   

சூரி நாயகனாக  நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில்,  சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், திருச்சி   பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார். 


இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 


தொழில் நுட்ப குழு விபரம் 


எழுத்து, இயக்கம் - பிரசாந்த் பாண்டியராஜ்

தயாரிப்பு - K குமார் 

தயாரிப்பு நிறுவனம் - Lark Studios 

இசை - ஹேசம் அப்துல் வஹாப் 

ஒளிப்பதிவு - தினேஷ் புருஷோத்தமன்

கலை இயக்கம் - G துரை ராஜ்

படத்தொகுப்பு - கணேஷ் சிவா 

சண்டைப்பயிற்சி - மகேஷ் மேத்யூ 

மக்கள் தொடர்பு - யுவராஜ்.


கருத்துகள் இல்லை