ட்ராமா திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான விவேக் பிரசன்னா நடிப்பில் ட்ராமா மற்றும் நடிகை சாந்தினி, பிரதோஷ், பூர்ணிமா ரவி , மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ட்ராமா திரைப்படம் ஒரு திரில்லர் கலந்த உரையாடலாக, மருத்துவ பின்னணியில் நடந்துகொண்டு இருக்கும் மர்மங்களைத் திரைக்கதை வழியாக விவரிக்கிறது. ஒரே கதையை மூன்று விதமான வழிகளில் பிரித்து, அவற்றை ஒரு மர்ம முடிச்சாக இணைத்திருப்பது இயக்குநர் தம்பிதுரை மாரியப்பனின் முக்கியமான கதையமைப்பு முறை எனத் தோன்றுகிறது.
விவேக் பிரசன்னா, சாந்தினி, பிரதோஷ், பூர்ணிமா ரவி , மாரிமுத்து உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களில் உணர்வுகளை வெளிப்படுத்தி படம் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் கதையின் பரபரப்பை உயிர்ப்பூட்ட உதவியிருக்கிறது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை