படவா திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான நடிகர் விமல் நடிப்பில் படவா மற்றும் சூரி , தேவதர்ஷினி , சித்ரா ராவ் , நமோ நாராயணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முக்கிய அம்சங்கள்:
- கதை: ஒரு பழைய சூழலில், நாயகனின் செயல்பாடுகளால் மக்கள் மிக அவதிப்படுகின்றனர். மக்கள் அவனை நாடு கடத்த, பின்னர் ஊருக்கு திரும்பியபோது வந்த பிறகு ஊர் தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர். பின்னர் மக்களுக்கு என்ன செய்தார் என்பத கதை ?
- நடிப்பு: விமல், சூரி இருவரும் அவர்களுக்கே உரிய பாணியில் நடித்து இருக்கிறார்கள்.
- தேவதர்ஷினி மற்றும் நமோ நாராயணன் இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளனர்.
- இசை: ஜான் பீட்டரின் பாடல்கள், பின்னணி இசை கதையோடு நல்ல தொடர்பில் இருக்கிறது.
- தொழில்நுட்பம்: ஒளிப்பதிவும், பாடல் காட்சிகளின் வண்ணப்புயலும் திரையரங்கில் ரசிக்கும்படியானவை.
- சமூக கருத்து: விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல மரங்களை பற்றிய மேலோட்டமான சுட்டிக்காட்டல்.
நெகட்டிவ் அம்சங்கள்:
- பழைய கதைக்களம், பெரிய புதுமை இல்லை.
- தேவையில்லாத காட்சிகள் படத்தை நீளமாக்குகின்றன.
முடிவு:
பழக்கமான கமர்ஷியல் படங்களை விரும்புபவர்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கக்கூடிய படம். ஆனால், புதுமை எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு மிகுந்த திருப்தி தராது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை