சற்று முன்



ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது !


ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது ! 


நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  சினிமா மற்றும் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சிறந்த கதைகளை வழங்கி வருகிறது. ராமு செல்லப்பா இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள்  மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள  சுவாரஸ்யமான டிரெய்லர் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான தசரா திருவிழாவின் பின்னணியில் பழிவாங்கும் கதையாக இது அமைந்திருக்கிறது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  ஆக்‌ஷன், எமோஷன், உண்மை, அதிகாரம் மற்றும் பழிவாங்கல் என ’OKJK’ வெப்சீரிஸின் உலகம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின் இதுவரை பார்த்திராத கண்கவர் காட்சிகளுடனும் கொண்டாட்டத்துடனும் அதற்கு பின்னான உணர்வுகளுடனும் ‘ஓம் காளி ஜெய் காளி’ உருவாகியுள்ளது. 


வெப்சீரிஸில் கணேசன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து நடிகர் விமல் கூறும்போது, "நான் இதற்கு முன்பு நடித்திருந்த மற்ற கதாபாத்திரங்களில் இருந்து கணேசன் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தது. சாதாரண ஒரு நபரில் இருந்து திருவிழாவிற்காக புதிய அவதாரம் எடுத்தது மறக்க முடியாத சவாலான அனுபவமாக இருந்தது”.


வெப்சீரிஸ் பற்றி இயக்குநர் ராமு செல்லப்பா கூறும்போது, "தசரா என்பது வெறும் திருவிழா மட்டுமல்ல. அது ஒரு உணர்வு. நாட்டுப்புறக் கதைகளையும் பழிவாங்குதலையும் ஒன்றிணைக்கும் கதையை இதில் உருவாக்கி இருக்கிறோம்” என்றார். 

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'ஓம் காளி ஜெய் காளி' மார்ச் 28 அன்று வெளியாகிறது. 

*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். இது ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டின் ஒன்றிணைப்பாகும். புதுமையான தொழில்நுட்பம் மற்றும் சிறந்த கதையுடன் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கு தரத்தை மேம்படுத்துவத்தை ஜியோஹாட்ஸ்டார் நோக்கமாகக் கொண்டுள்ளது.


கருத்துகள் இல்லை