சற்று முன்

முன்னணி நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார் ! | Sri Eshwar College of Engineering Clinches Top Honor at 13th Edition of Quest Global Ingenium ! | “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு ! | ஜூலையில் வெளியாகிறது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 'மாரீசன்' ! | இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் ! | ZEE5 தளம் வழங்கும் "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ! | நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி - அவர் நடிக்கும் ' ஆர் பி எம் - R P M' படத்தின் முன்னோட்டம் வெளியீடு ! | அறம் செய் திரை விமர்சனம் ! | வீர தீர சூரன் - பாகம் 2: திரை விமர்சனம் ! | லூசிஃபர் 2 : எம்புரான் திரை விமர்சனம் ! | தி டோர் திரை விமர்சனம் ! | கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா திரையில் ! | தமிழக பயணிகளின் முதன்மையான சுற்றுலா தலமாக மத்தியப் பிரதேசம் திகழ்வதாக சென்னை ரோட்ஷோவில் அறிவிப்பு ! | Honey Bee Collection – Bold, Fierce, and Unapologetically You ! | Westside launches its 244th store in Chennai Westside, a Tata Enterprise under Trent Ltd has launched its new store in Kelambakkam ! | Marriott International’s city-wise guide to the indulgent Eid Celebrations ! | Hrithik Roshan Reflects on the Phenomenal Success of Yas Island’s ‘Zindagi Ko Yas Bol’ Campaign and His Journey as Brand Ambassador ! | Coke Studio Bharat Drops ‘Holo Lolo’, A Modern Take on Assam’s Musical Heritage ! | Marriott Hotels Brings Its Wonderful Hospitality to the Wilderness of Uttarakhand with the Opening of Jim Corbett Marriott Resort & Spa ! | சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ மதுரை - திருச்சி ப்ரமோஷன் ! | Coca-Cola® India Brings Yash Onboard to Redefine ‘Halftime’ Moments ! | Kinetic Green Sets New Standard with Industry-First Unlimited KM "Assured Buyback Offer" on E-Luna, Boosts Customer Assurance ! | A Celebration of Art, Elegance and Legacy at Taj Khazana - Taj Coromandel, Chennai ! | 24-year-old Taiwanese Student wins the title of ‘World’s Best Coder’ at TCS CodeVita 2025 ! | Videotex Becomes the First Indian ODM to Design and Manufacture QD Mini LED Smart TVS !


கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா திரையில் !

“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா  திரையில் !


ஆருத்ரன் பிக்சர்ஸ்  சார்பில், S.முருகன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம்  “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


இந்நிகழ்வினில்....

*நடிகை சுதா பேசியதாவது...* 

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமை, எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி. 

*நடிகை சாந்தி பேசியதாவது...* 

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் இயக்குநருக்கு நன்றி, என் முதல் படம் என்னை நம்பி சான்ஸ் தந்ததற்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது, படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி

*நடிகர் வைகுண்டம் பேசியதாவது பேசியதாவது...* 

இந்தப்படத்தில் வில்லன் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி, படம் மிக நல்ல எண்டர்டெயினர் படமாக வந்துள்ளது. மக்களிடம் சேர்க்க வேண்டியது பத்திரிக்கையாளர்களாகிய உங்கள் பொறுப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

*ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் ஆனந்த் பேசியதாவது...* 

மேடையில் இருக்கும் அனைவருக்கும் நன்றி, தயாரிப்பாளரை இப்போது தான் இரண்டாம் முறையாகப் பார்க்கிறேன். இயக்குநர் விக்னேஷ் என் நண்பர் அவர் ஒரு படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த போது, உங்களோடு தான் படம் செய்வேன் என்றார், அதே போல எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்துள்ளார், தயாரிப்பாளர் யாருக்கும் சம்பள பாக்கி வைக்கவில்லை, நான் பார்த்ததில் மிக நல்ல தயாரிப்பு நிறுவனம் இது. இன்னும் நீங்கள் பல படங்கள் தயாரிக்க வேண்டும், இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி. 

*நடிகர் அஷ்வின் பேசியதாவது...* 

மிக மிக மகிழ்ச்சி, மிக அருமையான டீம் இது, இன்றைய காலகட்டத்தில் ஒரு நாள் ஷீட்டிங்க் என்பதே கஷ்டம், இந்தத் திரைப்படத்தை இந்த அளவு கொண்டு வந்த தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷ் மிக நல்ல இயக்குநர். மிக அருமையாக இப்படத்தைத் தந்துள்ளார். இப்படத்தில் பணியாற்றியது மிக நல்ல அனுபவமாக இருந்தது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத்தாருங்கள் நன்றி. 

*நடிகர் ஹர்ஷத் பேசியதாவது...*

நான் இங்கு இருக்க இயக்குநர் நெல்சன் அண்ணா தான் காரணம் அவருக்கு நன்றி.  இயக்குநர் விக்னேஷ் நான் ஒரு ஷீட்டில் இருந்த போது போன் செய்தார், அவர் அணுகிய  விதம், அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை வில்லனாக நடிக்க கேட்டார். அவருக்கு ரொம்ப நல்ல மனசு. எல்லோரும் அவர் மீதான அன்பில் பணியாற்றினார்கள். உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. மீடியா இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

*பாடாலாசிரியர் அஸ்மின் பேசியதாவது....*

2012 ல் விஜய் ஆண்டனியால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப் பட்டேன்,  அவருக்கு என் நன்றி. இயக்குநர் விக்னேஷ் அவர்களை, இப்படத்தில் ஒரு பாடல் எழுதத்தான் சந்தித்தேன், அந்தப்பாடல் பிடித்துப் போய், எல்லாப்பாடல்களையும் எழுதும் வாய்ப்பைத் தந்தார். எல்லோருக்கும் இப்படப் பாடல்கள் பிடித்திருக்குமென நம்புகிறேன். அனைத்து மீடியா நண்பர்களும் இப்படத்திற்கு ஆதரவைத்தர வேண்டும் நன்றி. 

*நாயகன் நிஷாந்த் பேசியதாவது...* 

இந்த வருடம் மிகுந்த ஆசிர்வாதமாக அமைந்துள்ளது. எனது மூன்று படங்கள் வெளியாகவுள்ளது. கொஞ்ச நாள் பொறு தலைவா மிக நன்றாக வந்துள்ளது. தயாரிப்பாளர் யாருக்கும் எந்தக் குறையும் வைக்காமல், மிக பொறுப்புடன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் மிக அட்டகாசமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்திற்கு மீடியா நண்பர்கள் முழு ஆதரவைத் தர வேண்டுகிறேன் நன்றி. 

*இசையமைப்பாளர் சமந்த் நாக் பேசியதாவது...* 

தயாரிப்பாளரை இன்று தான் முதல் முறையாகப் பார்க்கிறேன், மிக நல்ல தயாரிப்பாளர். விக்னேஷுக்கும் எனக்கு அடிக்கடி சண்டை வரும், ஆனால் எல்லாம் படத்துக்காகத் தான். மிக அருமையாகப் படத்தை உருவாக்கியுள்ளார். பாடலாசிரியர் அஸ்மின் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. என்னுடன் வேலை பார்த்த பிரவீனுக்கு நன்றி. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் நன்றி. 

*இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது...* 

கொஞ்ச நாள் பொறு தலைவா இந்த விழா ஒரு குடும்ப விழாவைப் போல உள்ளது. எல்லோரும் நண்பர்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர். எல்லோரும் தயாரிப்பாளரைப் பற்றி மிக மகிழ்ச்சியாக பகிர்கிறார்கள். தயாரிப்பாளர் முருகன் அவர்களுக்கு நன்றி. உழைப்பவர்களுக்குச் சரியான ஊதியம் தந்த முதல்பட தயாரிப்பாளருக்காக, இப்படம் ஓட வேண்டும். இயக்குநர் விக்னேஷ் மிக அருமையாக இயக்கியுள்ளார். பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது. இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள். ஈழத்து கவிஞர் அஸ்மின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார், அவருக்குத் தமிழ் சினிமா நல்ல எதிர்காலத்தைத் தரும். நடிகர் நிஷாந்த் அருமையாக நடித்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

*டிரெய்லர் இசையமைப்பாளர்  ஷாஜகான் பேசியதாவது...*

இந்தப்படக்குழுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இந்த அனுபவம் மிகப் புதுமையாக இருந்தது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற பிரார்த்திக்கிறேன் நன்றி. 

*ஆருத்ரன் பிக்சர்ஸ்  சார்பில் கலியமூர்த்தி பேசியதாவது...* 

ஆரூத்ரன் நிறுவனம் 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது, அதன் அடுத்த கட்டமாகத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரித்து உள்ளோம். எப்போதும் காமெடி படத்திற்குத் தனி வரவேற்பு உண்டு. மக்களுக்குப் பிடிக்கும் வகையில் அருமையான காமெடி படம் எடுத்துள்ள விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள். நான் படம் பார்த்தேன் எனக்குப் படம் மிகவும் பிடித்தது. இப்படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டியது மீடியாக்களின் பொறுப்பு, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


*நடன இயக்குநர் சபரீஷ்* 

இந்தப்படத்தில் இரண்டு பாடல்கள் வேலை செய்துள்ளேன், ஒரு பாடல் தான் வேலை செய்வதாக இருந்தது என் வேலையைப் பார்த்து எனக்கு இரண்டு பாடல் வாய்ப்பைத் தந்தார் இயக்குநர் விக்னேஷ். அவருக்கு என் நன்றி. இப்படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


*இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் பேசியதாவது...*

என்னை முழுமையாக நம்பி இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் முருகன் சாருக்கு என் நன்றி. ஒரு நாள் கூட அவர் ஷீட்டிங்க் வந்ததே இல்லை, முழுமையாக என்னை நம்பி, நான் கேட்ட அனைத்தையும் தந்தார். இப்படத்தில் என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிக்கை மீடியா நண்பர்கள் தான் எங்கள் படத்திற்கு முழு ஆதரவைத் தர  வேண்டும்.  ஒரு நல்ல படம் தந்துள்ளோம் ஆதரவு தாருங்கள் நன்றி. 

"வாழ்வில் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது" என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.  நாயகன் நாயகியின் லிப்லாக் ரொமான்ஸுடன்  காதல், நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில், முழுமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பிரபல இயக்குனர்களான சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திரு. விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரிஷான் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம், மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன் லவ்வர் பாயாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெயிலர் புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார். சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். 

ஒளிப்பதிவு ஜோன்ஸ் ஆனந்த். பாடல்களுக்கு சமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியிருக்கிறார். எடிட்டிங் விது ஜீவா. 

இத்திரைப்படத்தை,, 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறையில் வெற்றி கொடி நாட்டிய, மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற ஆரூத்ரன் லேண்ட் டெவலப்பர்ஸ்  நிறுவனத்தின், மற்றொரு அங்கமான, ஆரூத்ரன் பிக்சர்ஸ் சார்பில் S.முருகன் தயாரித்து, வழங்குகிறார்.


கருத்துகள் இல்லை