அகத்தியா திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் நடிகரான நடிகர் ஜீவா நடிப்பில் அகத்தியா மற்றும் ராக்ஷி கண்ணா, ஆக்சன் கிங் அர்ஜுன் , நிகழல் ரவி , வி டிவி கணேஷ் , ரெடின் கிங்ஸ்லி, ரோகிணி , விவேக் பிரசன்னா, சிறப்பு தோற்றம் யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பா. விஜய்.
"அகத்தியா" திரைப்படம் ஒரு திகில் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக இருப்பது சித்த மருத்துவம், சித்தர்களின் மந்திர வலிமை, அமானுஷ்ய சக்திகள், மற்றும் மர்மங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இது, பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கியிருப்பது.
படத்தின் சிறப்பம்சங்கள்:
நாயகன் ஜீவா கதையின் மையக் கேரக்டராக, தனது பெற்ற தாய்க்காக அமானுஷ்ய சக்திகளுடன் போராடும் கதைநாயகனாக உருவாக்கப்பட்டுள்ளார்.
அர்ஜுனின் நடிப்பு – ஒரு சித்த மருத்துவர் கதாபாத்திரமாக அவரது அனுபவம் படத்திற்கு அதிகமான வலிமையை சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி – பங்களாவின் பிரமாண்டமும், பயங்கர காட்சிகளும் அவரது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன.
கலை இயக்கம் (P. Shanmugam) – பிரெஞ்சு பங்களாவின் ட்ரான்ஸ்பர்மேஷன் (அழகான பங்களாவாக இருந்து பயங்கர ஸ்கேரி ஹவுஸாக மாறுதல்) மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் இசை – "என் இனிய பொன் நிலாவே..." ரீமிக்ஸ் மற்றும் அம்மா பாடல் ஆகியவை ரசிகர்களுக்கு சிறப்பாக உரியது.
ஜீவா மற்றும் ரோகினி இருவருக்கும் தாய்க்கும் மகனுக்கும் இருக்கும் பாசப்போர்தான் இப்படத்தில் மிகப்பெரிய ஹைலைட்.
எதிர்மறை அம்சங்கள்:
ராஷி கண்ணாவின் கேரக்டரை வளர்க்காதது – காதலியாக இருப்பினும், கதையில் போதிய தாக்கம் இல்லை.
ரெடின் கிங்ஸ்லியின் பங்கு – திணிக்கப்பட்ட ஹாஸ்யம், சில இடங்களில் பார்வையாளர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தலாம்.
முடிவுரை:
"அகத்தியா" ஒரு வித்தியாசமான திகில்-ஃபேண்டஸி திரைப்படமாக சித்த மருத்துவம் மற்றும் அமானுஷ்ய சக்திகளை இணைத்து வித்தியாசமான கதையை சொல்ல முயன்றுள்ளது. சில குறைகள் இருந்தாலும், குறிப்பாக சித்தர் கதைகள், ஒளிப்பதிவு, கலை இயக்கம், மற்றும் யுவனின் இசை ஆகியவை படத்தை வேறுபடுத்தி காட்டுகின்றன.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை