வருணன் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான துஷ்யந்த் நடிப்பில் வருணன் மற்றும் நடிகை கேப்ரில்லா, ஹரிப்பிரியா , ஜெயபிரகாஷ் , ராதாரவி , சரண்ராஜ் , மகேஸ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஜெயவேல் முருகன் .
நாயகனாக துஷ்யந்த், ஜெயப்பிரகாஷ், நாயகியாக கேப்ரில்லா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்திருக்கின்றனர். பிரியதர்ஷன்-ஹரிபிரியா ஜோடியும் தங்கள் பங்குகளை நன்றாக செய்திருக்கிறார்கள்.
வில்லன் சங்கர்நாக் விஜயன், அவரது வில்லத்தனத்தால் கவனம் ஈருக்கிறார். ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன் உள்ளிட்ட நடிகர்கள் திரைக்கதைக்குத் துணை நிற்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், லைவ் லொக்கேஷன்களை நன்கு பயன்படுத்தி வேகமான காட்சிகளை படம்பிடித்திருக்கிறார், குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி சிறப்பாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் போபோ சசியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கதையோட்டத்திற்கு ஏற்றபடிச் செல்லும் நிலையில், சில இடங்களில் ஓவராக தோன்றுகிறது.
என். ரமணா கோபிநாத்தின் வசனங்களில் பலத்த தாக்கம் இல்லை.
இயக்குநர் ஜெயவேல் முருகன், தண்ணீர் கேன் தொழில்மீது கவனம் செலுத்துவதாகக் கூறியிருந்தாலும், அது முக்கியமாக இல்லை. முற்றிலும் காதல், மோதல், திருமணம் போன்ற வழக்கமான கமர்ஷியல் சூழ்நிலையுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை