சற்று முன்



மாடன் கொடை விழா திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் புது முகங்கள் மற்றும் அறிமுகம் நாயகனாக கோகுல் கவுதம் நடிப்பில்  மாடன் கொடை விழா .

மற்றும் நடிகை ஷர்மிஷா,  டாக்டர் சூர்ய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஶ்ரீபிரியா, பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தங்கப்பாண்டி. 

 'மாடன் கொடை விழா' படம் கிராமத்து வாழ்வியல், சிறுதெய்வ வழிபாடு, சமூக உணர்வு மற்றும் குடும்ப உறவுகளை முன்னிறுத்தும் ஒரு சிறப்பான படைப்பாக இருக்கிறது. கதைக்களத்தின் மூலம் உணர்ச்சிப் பேரலையை ஏற்படுத்தி, மத, சமூக, பாரம்பரிய அம்சங்களை ஒட்டுமொத்தமாக சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.


இயக்குநர் இரா.தங்கபாண்டி, நமது வாழ்க்கை முறை, கலாச்சாரம், மற்றும் சமூக கருத்துக்களை மிக நேர்த்தியாக இணைத்து கொடுத்திருப்பது படம் வெற்றிபெற காரணமாகியுள்ளது. அதேசமயம், நடிகர்கள், இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் தங்கள் பங்குகளை சிறப்பாக செய்திருப்பது படத்தின் தரத்தை உயர்த்துகிறது.

இதேபோல், பெண்களின் உரிமை, திருமண முறைகள், மதங்களின் உண்மையான நோக்கம் போன்ற சமூக கருத்துக்களை படத்தினுள் விவாதித்திருப்பது, இப்படத்திற்கு தனித்துவமான முத்திரையை ஏற்படுத்தியிருக்கிறது.


இத்தகைய பாரம்பரியத்தோடு கலந்த உணர்வுப்பூர்வமான படங்கள் பார்வையாளர்களிடம் எப்போதும் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்தும். 'மாடன் கொடை விழா' அப்படிப்பட்ட ஒரு படமாகவே இருக்கிறது.

இத்திரைப்படம் தமிழர்களின் பாரம்பரியம் மண்வாசனையும் அனைவராலும் உணர முடியும். 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம். 

Rating : 3.5 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை