கிங்ஸ்டன் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் கிங்ஸ்டன் மற்றும் நடிகை திவ்ய பாரதி , சேத்தன் , கயல் தேவராஜ் ,மைம்கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை ஆரம்பமே :
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பகுதியில் ஒரு சிறிய கிராமம் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு அவரது வாழ்வாதாரமே மீன்பிடித் தொழில்தான் இவர்கள் யார் கடலுக்கு சென்றாலும் உயிருடன் வருவதில்லை பிணமாகத்தான் வருகிறார்கள். மர்மம் சூழ்ந்த கடல், 40 ஆண்டுகளாக மீனவர்கள் அச்சத்தில் வாழ்வது போன்ற கூறுகள் வலுவான அடிப்படை கருத்துகளாக இருக்கலாம். ஆனாலும் அதிலிருந்து இந்த கிராமம் மீண்டு வந்ததா வரலையா எப்படி மீண்டார்கள் என்பதே இப்படத்தின் கதை ?
ஆனால், நாயகன் கடத்தல் தொழிலை விட்டு சமூக நலத்திற்காக போராடுவது போன்ற அம்சம் எதிர்பார்க்கக்கூடிய வழக்கமான திருப்பமாக தெரிகிறது.
நாயகியாக திவ்ய பாரதிக்குக் கதையில் போதுமான வேலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் இவரது கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தி இருக்கலாம்.
தொழில்நுட்ப அம்சங்கள்:
- ஒளிப்பதிவு: கோகுல் பினாயின் கடலை ஒளிப்பதிவு செய்யும் முயற்சி பாராட்டத்தக்கது, ஆனால் கிரீன்ஸ்கிரீன் கிராபிக்ஸ் மிகைபடுத்தப்பட்டிருக்கலாம்.
- இசை: ஜி.வி.பிரகாஷ் இசை நன்றாக உள்ளது.
- பாடல்கள் : அழுத்தமில்லாமல் இருக்கிறது.
- பின்னணி இசை : நன்றாக உள்ளது பேக்ரவுண்ட் ஸ்கோர் அனைத்தும் சிறப்பு.
- விசுவல்ஸ் & கிராபிக்ஸ்: அமானுஷ்ய உருவம் மற்றும் கடலுக்குள் நடைபெறும் மோதல்களின் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது.
முடிவுரை:
"கிங்ஸ்டன்" ஒரு நல்ல கருத்துடன் தொடங்கிய பயணம், மற்றும் ஒரு கடல் ராசாவாக ஜிவி பிரகாஷ் குமார் வாழ்ந்துள்ளார்.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம் .
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை