சற்று முன்



லெக் பீஸ்' திரை விமர்சனம் !

 


'லெக் பீஸ்' திரைப்படம் நான்கு நண்பர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாகப் படம்பிடிக்கிறது. மணிகண்டன் (குயில்), கருணாகரன் (கிளி ஜோதிடர்), ரமேஷ் திலக் (பலகுரல் கலைஞர்), ஸ்ரீநாத் (பேய்விரட்டி) ஆகியோர் சாலையில் கிடைக்கும் 2000 ரூபாய் நோட்டின் மூலம் பிரச்சனையில் சிக்குகிறார்கள். அந்த பிரச்சனையில் இருந்து அவர்கள் தப்பிக்கிறார்களா இல்லையா என்பதை நகைச்சுவையாகச் சொல்கிறது படம்‌ !?

யோகி பாபு தனது வழக்கமான பாணியில்  அசத்தியுள்ளார். அவரது கதாபாத்திரம் இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. 

விடிவி கணேஷ், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, ஜி.மாரிமுத்து, மதுசூதன ராவ் ஆகியோர் தங்கள் அனுபவமான நடிப்பால் படத்தை தாங்கியுள்ளனர். அனைவரும் கதைக்கேற்ப கச்சிதமாக பொருந்தி உள்ளனர். 

ஒளிப்பதிவாளர் மாசாணி காட்சிகளை நிறைவாகப் படம்பிடித்துள்ளார். இசையமைப்பாளர் பிஜோர்ன் சுர்ராவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கின்றன. படத்தொகுப்பாளர் இளையராஜா.எஸ் இரண்டாம் பாதியில் திரைக்கதை திருப்பங்களைக் கொண்டு படத்தை சுவையாக நகர்த்தியுள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதிய எஸ்.ஏ.பத்மநாபன் கிரைம் திரில்லரை நகைச்சுவை பாணியில் சொல்ல முயற்சித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீநாத் பல நடிகர்களை சரியாக கையாள்ந்து பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளார். முதல் பாதி சற்று மெதுவாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக நகர்ந்து பார்வையாளர்களை மகிழ்விக்கிறது.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம் 

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை