சற்று முன்

Toyota Kirloskar Motor Enhances Education and Healthcare Infrastructure in Raichur under its CSR Prog ! | Marriott Hotels Debuts in Udaipur, Blending Timeless Charm, Cultural Heritage and Contemporary Elegance at Udaipur Marriott Hotel ! | ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி ! | Samsung Launches Galaxy M56 5G, Segment’s Slimmest Smartphone in India ! | குபேரா'வின் முதல் பாடலான போய்வா நண்பா வெளியிடப்பட்டது ! | டால்மியா பாரத் அறக்கட்டளை 77 DIKSHa யிற்சியாளர்களுக்கான பாராட்டு விழாவை டால்மியாபுரத்தில் ஏற்பாடு செய்துள்ளது ! | கலியுகம் பட வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார் கலைப்புலி S தாணு ! | விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' (ACE) திரைப்படம்,மே மாதம் 23 ஆம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது ! | தக் லைஃப் - முதல் பாடலை கமல் ஹாசன், மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிலம்பரசன் டி.ஆர், மற்றும் த்ரிஷா வெளியிட்டார்கள் ! | 20 - ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சச்சின் ! | முதலாளித்துவ அடிப்படையில் விஜய் செயல்படுகின்றார்* - இந்திய சுயராஜ்ய கட்சி தலைவர் ராம்குமார் ஆவேசம் ! | சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா ! | கேங்கர்ஸ்” பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி ! | 45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா ! | 10 ஹவர்ஸ் திரை விமர்சனம் ! | நாங்கள் திரை விமர்சனம் ! | அம்..ஆ திரை விமர்சனம் ! | Marvel Studios Releases The Trailer For “The Fantastic Four: First Steps” ! | இண்டஸ் டவர்ஸின் ஸ்மார்ட் வகுப்பறைகள் இந்திய நிலப்பரப்பின் தெற்கு முனையை அடைகின்றன ! | சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும்"பேடிங்டன் இன் பெரு" ! | மிஸ் மேல கிரஷ் ' வீடியோ ஆல்பம் வெளியீடு ! | சென்னையில் நீரிழிவு நோயின் பரவல்: ஆய்வு தரவுகளை வெளியிட்ட காவேரி மருத்துவமனை ! | Kauvery Hospital releases data on the Diabetes Prevalence in Chennai through a cross sectional study ! | ஏலேலோ இசை ஆல்பம் ட்ரீம்ஸ் வெளியீட்டு விழா ! | ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் #HK15 !


ரசிகர்களின் பாராட்டு மழையில் 'ஸ்வீட் ஹார்ட் ' படக் குழு !


ரசிகர்களின் பாராட்டு மழையில் 'ஸ்வீட் ஹார்ட் ' படக் குழு ! 

*ரசிகர்களை சந்தித்து அன்பை பகிர்ந்து வரும் 'ஸ்வீட் ஹார்ட்' படக் குழு*


'மாடர்ன் மாஸ்ட்ரோ ' யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான 'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள். 

உறவுகள் குறித்த உளவியல் சிக்கலில் தவிக்கும் காதலர்- அவரை காதலிக்கும் காதலி- இந்த ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசனையாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் படைப்பாக 'ஸ்வீட் ஹார்ட்' இருந்ததால்... ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவினை வழங்கி வருகிறார்கள். அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் வசீகரிக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் கவரப்பட்ட ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கத்திற்கு வந்து தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். 


ரசிகர்களின் வரவேற்பினை கண்டு சந்தோஷமடைந்த படக் குழு, கடந்த 19 ஆம் தேதியன்று ஈரோடு - ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும், சேலம் - டி என் சி திரையரங்கத்திற்கும்,  கோவை - பிராட்வே திரையரங்கத்திற்கும்,  திருப்பூர் - ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும் நேரடியாக சென்று ரசிகர்களின் வரவேற்பினை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் படக் குழுவினரை நேரில் சந்தித்த ரசிகர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டு, படத்தைப் பற்றிய தங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து படக்குழு இருபதாம் தேதியன்று மதுரை - வெற்றி திரையரங்கத்திற்கும், திருச்சி - எல்.ஏ சினிமாஸிற்கும் சென்று ரசிகர்களை சந்தித்தனர். இந்நிகழ்வுகளில் ரசிகர்கள் பலரும் கதையின் நாயகனான ரியோ ராஜையும், நாயகி கோபிகா ரமேஷையும் வெகுவாக பாராட்டினார்கள். அதிலும் ஒரு ரசிகை ரியோ ராஜை கண்கலங்க பாராட்டியது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. 

தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால்.. படக்குழு மகிழ்ச்சியடைந்திருக்கிறது.


கருத்துகள் இல்லை