சப்தம் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆதி அவரது நடிப்பில் சப்தம் மற்றும் லட்சுமிமேனன் , சிம்ரன் , லைலா , அபிநயா , ரெடின் கிங்ஸ்லி , எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன்.
கதை ஆரம்பமே :
கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர் ஆதியை ஒரு கல்லூரி அழைக்கிறது, அங்கு தொடர்ச்சியாக மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆதி விசாரணை செய்ய, பலர் அவருக்கு எதிராக இருப்பதுடன், சிலர் உதவுகிறார்கள். பின்னர், இது ஒரு அமானுஷ்ய சம்பவமா, அல்லது ஏதேனும் மறைக்கப்பட்ட உண்மையா என்பது பற்றி திருப்பங்களுடன் படம் நகர்கிறது. இறுதியில் என்ன நடந்தது அது என்ன அமானுஷ்யம் அதை ஆதி கண்டு பிடித்தாரா என்பதே கதை !
பாத்திரங்கள் & நடிப்பு:
ஆதி – தனது முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் பளிச்சென பொருந்தியுள்ளார்.
லட்சுமி மேனன் – அழகாகவும், நடிப்பிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
லைலா – திடீர் என்ட்ரியுடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.
சிம்ரன் – அமைதியாக இருந்தாலும், தனது சிறப்பான நடிப்பால் கதைச் சென்றியைப் பெரிதாக மாற்றுகிறார்.
அபிநயா – மென்மையான நடிப்பில் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி – அவருடைய பாத்திரம் தேவையில்லாதது போல இருக்கிறது.
டெக்னிக்கல் அணுகுமுறை :
இசை (தமன்) – பின்னணி இசையில் வித்தியாசமான முயற்சி, ஒலி மூலம் பயத்தை உருவாக்கும் முயற்சி.
ஒளிப்பதிவு (அருண் பத்மநாபன்) – சர்ச்சில் படப்பிடிப்பு, லைப்ரரி ஆர்ட் டிசைன் என விஷுவல்ஸ் சிறப்பாக உள்ளன.
எடிட்டிங் (சபு ஜோசப்) – விறுவிறுப்பான முதல் பாதி, ஆனால் இடைவேளைக்கு பிறகு சற்று மெதுவாகிறது.
இயக்கம் (அறிவழகன்) – "ஈரம்" படத்திலிருந்த பயமூட்டும் உணர்வு இங்கே சற்றே குறைவாக இருப்பதாக உணரப்படுகிறது.
விமர்சன பார்வை :
படம் முழுவதும் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக பார்ப்பதற்குரியது.
ஹாரர் & த்ரில்லர் அம்சங்கள் கலந்து உணர்ச்சி சார்ந்த கனெக்ஷன் அதிகம் இல்லை.
பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் போன்றவை சிறப்பாக உள்ளன.
கதையின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக செல்கிறது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை