போட்டோமேக்ஸ் நிறுவனத்தில் ஜெச்.பி. இண்டிகோ 7கே தொழில்நுட்பம் !
போட்டோமேக்ஸ் நிறுவனத்தில் ஜெச்.பி. இண்டிகோ 7கே தொழில்நுட்பம் !
ரெடிங்டன்-ஹெச்.பி. இந்தியா நிறுவனங்கள் இணைந்து வழங்கின
போட்டோ மேக்ஸ் நிறுவனம் எச்பி இண்டிகோ 7கே டிஜிட்டல் பிரஸ் மூலம் 7 வண்ணங்களில் உயர்தர புகைப்படங்கள் அச்சிடும் வசதியை தென் தமிழகம், திருவனந்தபுரம் பகுதிகளில் அறிமுகப்படுத்துகிறது.
நாகர்கோவில்: 3 மார்ச் 2025: ரெடிங்டன் இந்தியா, நாட்டின் முன்னணி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனம் ஆகும். பார்ச்சூன் இந்தியா 500 நிறுவனங்களில் ஒன்றான இது, ஹெச்.பி இந்தியா நிறுவனத்துடன் இணைந்து போட்டோ மேக்ஸ் டிஜிட்டல் பிரஸ் நிறுவனத்துக்கு 7கே டிஜிட்டல் பிரஸ் வசதியை வழங்கியிருக்கிறது. போட்டோ மேக்ஸ் அமைந்திருக்கும் நாகர்கோவில், கன்யாகுமாரி மாவட்டதில் நீடித்து உழைக்கக்கூடிய - உயர்தரமான - ஏழு வண்ணங்களில் பல்வேறு வகைகளில் புகைப்படம் அச்சிடும் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் நிறுவனம் இதுதான்.
1996 ஆம் ஆண்டு மார்த்தாண்டம் பகுதியில் புகைப்படம் எடுத்துத் தரும் நிறுவனமாகத் தொடங்கிய போட்டோ மேக்ஸ் தற்போது ஒரு முழுமையான டிஜிட்டல் அச்சகமாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. திருவனந்தபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகள், மாவட்டங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. 1940 ஆம் ஆண்டில் ரெஜினால்டு கமலின் தாத்தா தாஸ் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தை தொடங்கினர் அந்நிறுவனம், தொடர்ந்து தொழில் நுட்பத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு தற்போது தலைமுறைகளைக் கடந்தும் இத்துறையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது.
ஹெச்பி இண்டிகோ 7k நாகர்கோவில் வட்டாரத்திலேயே (கன்னியாகுமரி மாவட்டத்திலேயே) முதன்முறையாக நிறுவப்பட்டிருப்பதால் இது ஃபோட்டோ மேக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். ஹெச்பி இண்டிகோ 7 கே பிளஸ் மூலம் போட்டோ மேக்ஸ் நிறுவனம் மிக உயர் தரத்திலான புகைப்படங்களை எச்பி இண்டிகோ மூலம் அச்சிட்டு தரும் வசதியை அறிமுகப்படுத்துகிறது.
புகைப்படங்களை உயர்தரத்தில் அச்சிடுவதோடு மட்டுமல்லாமல், 7 வண்ணங்களில் (அடர் சிவப்பு, பச்சை, சில்வர், வெள்ளை உள்ளிட்ட) அச்சிடும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம் புகைப்பட நிலையங்களும் தொழில்முறை .புகைப்படக்காரர்களும் புகைப்படங்களை மேம்படுத்தப் பணியாற்றுவோரும் தங்கள் வணிகத்தை சிறந்த முறையில் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும், டோனர்கள் அல்லது சில்வர் ஹாலைடு ஆகியவற்றின் மூலம் அச்சிடும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் இப்புதிய தொழில்நுட்பம் தவிர்த்து விடுகிறது. தற்போது ஹெச்.பி இண்டிகோ இரு புறங்களில் அச்சிடக் கூடிய, கிழியாத, தட்பவெப்பத்தால் பாதிக்கப்படாத புகைப்படங்களை அறிமுகப்படுத்துகிறது இது புகைப்படக்காரர்களுக்கு மிகத் தரமான தீர்வை வழங்குவதால் புகைப்படத்துறையில் இது நம்பகமான முன்னுதாரணமாக திகழ்கிறது.
"1940 ஆம் ஆண்டு எனது தாத்தாவின் கனவுகளோடு எங்களது நிறுவனத்தின் பயணம் தொடங்கியது அந்தப் பாரம்பரியத்தைப் புதுமைகளின் துணைகொண்டு பல நூற்றாண்டை நோக்கி நாங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் பரிணாம வளர்ச்சியில் ஹெச்.பி மற்றும் ரெடிங்க்டன் நிறுவனத்துடன் எங்களது உறவு முக்கிய பங்கு வைக்கிறது.
2012 ஆம் ஆண்டில் இண்டிகோ 5600 தொழில்நுட்பத்துடன் திருமண ஆல்பங்களை செய்யத் தொடங்கி தற்போது உயர் தரத்திலான புகைப்பட புத்தகங்கள் மற்றும் வணிகரீதியான அச்சு சேவைகளை இண்டிகோ 7கே தொழில் நுட்பத்தில் வழங்குவதுவரை எமது சேவைகளை விரிவாக்கியிருக்கிறோம். இப்புதிய தொழில் நுட்பமானது எங்களது திறன்களை மேம்படுத்துவதுடன் உயர்தரத்தில் பலதரப்பட்ட சேவைகளை வழங்க உதவுகிறது. இது எங்களது துறையில் நாங்கள் முன் நிற்க பெரிதும் கை கொடுக்கிறது” என்றார் போட்டோ மேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ரெஜினால்ட் கமல்.
இந்தியா முழுவதிலும் சிறப்பான தொழில்நுட்பத் தீர்வு வழங்குவதை எங்களது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். அவ்வகையில் போட்டோ மேக்ஸ் நிறுவனத்துடன் தற்போது கைகோர்த்து இருப்பது அதன் அடுத்த கட்ட .முன்னேற்றத்துக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்” என்றார் ரெடிங்டன் நிறுவனத்தின் துணைத் தலைவர் (டிஜிட்டல் பிரிண்டிங் )ரமேஷ் கே .எஸ் அவர்கள் .
“ தற்போதைய புதிய கூட்டுறவின் மூலமாக ஹெச்.பியின் புதுமையான இண்டிகோ 7 கே பிரஸ் வசதியை போட்டோ மேக்ஸ் நிறுவனத்துடன் இணைக்க நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது . இதன் மூலம் போட்டோ மேக்ஸ் நிறுவனம் தனது வர்த்தக செயல்பாடுகளை விரிவாக்கவும் புதிய மற்றும் நேரடி வாடிக்கையாளர்களை உருவாக்கவும் பெரிதும் கைகொடுக்கும்.
தென்னிந்திய சந்தையில் பலதரப்பட்ட அச்சுத் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தற்போது போட்டோ மேக்ஸ் நிறுவனத்துடன் நாங்கள் கைகோர்த்திருப்பதன் மூலமாக அந்நிறுவனம் அதனுடைய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்க முடியும் என்பதுடன் இப்பிராந்தியத்தில் தனது வணிகத்தை மென்மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும் “ என்றார்.
ஹெச்.பி இண்டிகோ 7 கே வசதியை நிறுவுவதன் வாயிலாக போட்டோமேக்ஸ் நிறுவனம், உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நல்ல ஆதரவை வழங்குகிறது. அதாவது குறைந்தபட்ச ஆர்டர் மற்றும் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்வது ஆகிய பல சவால்களில் இருந்தும் இவர்களுக்கு போட்டோ மேக்ஸ் மூலம் தீர்வு கிடைத்து விடுகிறது.
இப்புதுமையான தீர்வு இப்பிராந்தியத்தில் செயல்படும் நறுமணப் பொருட்கள், உணவு பதப்படுத்துதல், நகை தயாரிப்பு தொழில்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இதன் விளைவாக இப்பகுதி பொருளாதாரம் பலப்படுவதுடன் புதிய சந்தை வாய்ப்புகளும் கைகூடும்.
"ஹெச்பி நிறுவனத்தில் டிஜிட்டல் பிரின்டிங் துறையில் புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் வாயிலாக பலதுறை நிறுவனங்களுக்கும் .அவர்களின் செயல் திறன் மேம்பட உதவுகிறோம் . ஹெச்.பி.இண்டிகோ 7 கே தொழில்நுட்பத்தை போட்டோ மேக்ஸ் நிறுவனத்தில் அறிமுகம் செய்வதன் வாயிலாக உலகத்தரமான தரத்தில் அச்சிடுவது, பல்வேறு வகைகளில் அதனை சாத்தியப்படுத்துவது, நீடித்த தரம் ஆகியவற்றை இங்கு உறுதி செய்ய இயலும்.
ஏழு வண்ணங்களில் அச்சிடும் இப்புதிய தொழில் நுட்பமானது தனித்துவமான அச்சு மையைப் பயன்படுத்தி செய்யப்படுவதாகும். பிரீமியம் போட்டோ புத்தகம் முதல் தனித்துவமிக்க கட்டுமான தீர்வு வழங்குவது வரை அதிக எண்ணிக்கையிலான சேவைகளை எளிதாக வழங்க முடியும் .
ரெடிங்டன் மற்றும் போட்டோ மேக்ஸ் நிறுவனங்களுடன் கைகோர்ப்பதன் மூலமாக தென்னிந்தியாவில் அச்சுத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார் எச்பி இந்தியா நிறுவனத்தின் நிறுவன அச்சு வணிகப்பிரிவின் இந்திய பிரிவு தலைவரான ஏ .அப்பாதுரை.
ஹெச்.பி. இண்டிகோ 7கே டிஜிட்டல் பிரஸ்…
ஹெச்.பி. இண்டிகோ 7கே டிஜிட்டல் பிரஸ், ஷீட் பெட் முறையில் இயங்கும் .ஒரு டிஜிட்டல் அச்சு நிறுவனம் ஆகும். அச்சு தொழில்நுட்பம், சிறப்பான இயந்திர மயமாக்கல் மற்றும் வாய்ப்புள்ள பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அதிகபட்ச உற்பத்தித் திறனை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் தங்களது வாடிக்கையாளர்களை மற்றவர்களை விட ஓரடி முன்னே நகர்த்துவதில் சிறப்பான பங்கு வகிக்கிறது.
சூப்பர் ஃபைன் பிளாங்கெட் வசதி இருப்பதால் செவன் கே போட்டோ எனும் புதுவகை வரவானது புகைப்படத்தின் தரத்தை மென்மேலும் அதிகரிக்கிறது. ஹெச்.பி., அச்சு மை மற்றும் தனிச்சிறப்பான மென்பொருளையும் கைவசம் கொண்டுள்ளது.
ஆக, நேரடியாக காகிதத்தை வைத்து அச்சிடவும் இணையம் மூலமாக அச்சிடவும் முடியும். அது மட்டும் அல்லாமல் கேன்வாஸ், கிழியாத பொருட்கள், சிந்தடிக் லென்டிகுலர் மற்றும் உலோகங்களில்கூட அச்சிட முடியும். மேலும் ஹெச்.பி.யின் ஸ்மார்ட் ஸ்ட்ரீம் மொசைக் மூலம் பல்வேறு தொழில்நுட்பங்களின் உதவியுடன் லட்சக்கணக்கான பொருட்களில் அச்சிட முடியும்.
கருத்துகள் இல்லை