உலக வன தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் 2025 !
உலக வன தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் 2025 !
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலாண்மையில் தீவிர கவனம் செலுத்தும்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம்
TRICHY MAR 24
உலகம்முழுவதும் 'உலக வனதினம்' மற்றும்' உலக தண்ணீர்தினம்' கொண்டாடப்படும் இவ்வேளையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இது'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பூஜ்ஜிய காற்று மாசு வெளியேற்றம்' என்பதை வலியுறுத்தும் 6 தொலை நோக்கு சவால்களை கொண்ட உலகளாவிய டொயோட்டா சுற்றுசூழல் சவால் 2050ஐ உள்ளடக்கியதாகும்.இதில் தண்ணீர் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் இயற்கையுடன் இணைந்து எதிர் கால சமூகத்தை உருவாக்குதல் ஆகியவையும்அடங்கும். சுற்றுச்சூழல் மாசு இல்லாத வகையில் பூமியை பாதுகாக்கும் விதமாக, கடந்த 2015-ம் ஆண்டு டொயோட்டா சுற்றுச்சூழல் சவால் 2050 தொடங்கப்பட்டதிலிருந்து, கார்பன் உமிழ்வு, வளக்குறைவு, நீர்பற்றாக்குறை மற்றும் பல்லுயிர் இழப்பு போன்ற சவால்களைநிவர்த்தி செய்துவருகிறது. இந்நிறுவனம் 'கிரகத்திற்கான மரியாதை' என்ற தத்துவத்தை வலியுறுத்தி அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் உள்ளூர் சமூகங்களையும் வளப்படுத்துவதற்கும் நிறுவனத்தின் முயற்சிகளை ஊக்குவிக்கிறது. இந்தப் பாதையில், தண்ணீரை விலை மதிப்பற்ற வளமாக அங்கீகரித்து, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அதன் தொழிற்சாலைகளில் தண்ணீர் பயன்பாட்டை மேம்படுத்த குறைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி மற்றும் ரீசார்ஜ் என்னும் ஒரு முழுமையான '4ஆர்' உத்தியை பின் பற்றுகிறது. இதன் ஆலைகளுக்கு பயன்படுத்தும் தண்ணீரானது 89.3 சதவீதம் மறு சுழற்சி மூலமும், மழைநீர் சேகரிப்பு மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் அதன் தொழிற்சாலை வளாகங்களில் 51,000 கன மீட்டர் சேமிப்பு திறன் கொண்ட மழைநீர் சேகரிப்பு குளங்கள்மற்றும் 18 நிலத்தடி நீர் மறு சீரமைப்பு குழிகளை அமைத்துள்ளது. இதன் காரணமாக ஆண்டு தோறும் இதன் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் அதிநவீனகழிவுநீர்சுத்திகரிப்புநிலையம், மேம்பட்டதொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி 60 சதவீதகழிவு நீரை மறு சுழற்சி செய்கிறது, பின்னர் அது தொழில்துறை மற்றும் தோட்ட பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.இங்கு பருவ மழைக்கு முந்தைய (மே - ஜூன் 2022) நீர்மட்டம் 25.8 அடியாக இருந்தது, பருவமழைக்கு பிறகு (நவம்பர் - டிசம்பர்) 16.1 அடியாக கணிசமாக மேம்பட்டது. இந்த முயற்சிகள் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகளை பூஜ்ஜிய திரவ வெளியேற்ற ஆலையாக மாற்றஉதவுகின்றன. இதே போல் பல்லுயிர் பாதுகாப்பு திட்டத்தில் இந்நிறுவனம், விரிவான காடுவளர்ப்பு திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. டொயோட்டா கிரீன் வேவ் திட்டத்தின் மூலம், கடந்த 2009-ம் ஆண்டு முதல் அதன் வளாகத்தில் 3 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, 790க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் மற்றும் 410 வகையான விலங்கினங்களை கொண்ட ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை வளர்த்து வருகிறது. மியாவாகி காடு வளர்ப்பை பின்பற்றி, கார்பன் பிரித்தெடுத்தலை அடைந்துள்ளது - மொத்தம் 4,826.69 டன்கள் – மியாவாகி தோட்டங்கள் ஒரு ஏக்கருக்கு 30.86 டன்கார் பனை பிரித்தெடுத்தன, இது வழக்கமான தோட்டமுறைகளுக்கு ஏக்கருக்கு 8.45 டன்கள்ஆகும். டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் உற்பத்தித்துறை நிர்வாகதுணைத்தலைவர் மற்றும் இயக்குனர் பத்மநாபா கூறுகையில், எங்களை பொறுத்தவரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது எங்கள் வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆழமாக வேரூன்றி உள்ளது. இந்தியாவில் எங்களின் வெற்றிகரமான 26 ஆண்டுகளில் புதுமை, பெரு நிறுவன பொறுப்பு மற்றும் சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எங்களின் டெக் 2050 தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில், எங்கள் தொழிற்சாலை செயல்பாடுகளில் மட்டுமல்லாமல் அனைத்து பிரிவுகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளை ஒருங்கிணைத்து, சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்என்று தெரிவித்தார். 'இன்று நாளைக்கானது' என்னும் திட்டத்தின் கீழ் 25 ஏக்கரில் ஒரு அதி நவீன அனுபவ சுற்றுச்சூழல் கற்றல் மையமான சுற்றுச்சூழல் மண்டலத்தை டொயோட்டா நிறுவனம் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை