சற்று முன்



உலக சிறுநீரக தினம் 2025: சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணர்வு திட்டத்தை நடத்திய அப்போலோ டயாலிசிஸ் கிளினிக் !


உலக சிறுநீரக தினம் 2025: சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணர்வு திட்டத்தை நடத்திய அப்போலோ டயாலிசிஸ் கிளினிக் ! 

சிறுநீரக ஆரோக்கியம் மற்றும் ஆரம்பத்திலேயே பாதிப்பைக் கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை பரப்புவதே இதன் நோக்கம் 

சென்னை, மார்ச் 13, 2025: உலக சிறுநீரக தின அனுசரிப்பையொட்டி சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மற்றும் சிறுநீரகப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியத்தை முன்னிலைப்படுத்த அப்போலோ டயாலிசிஸ் கிளினிக்ஸ் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து நடத்தியது. விழிப்புணர்வை உயர்த்தும் பரப்புரை திட்டங்கள், சுகாதார முகாம்கள், உடல்நலம் குறித்த சிறப்புரைகள் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புறுதி முன்னெடுப்புகள் (CSR) ஆகியவை இவற்றுள் உள்ளடங்கும். “உங்களது சிறுநீரகங்கள் நன்றாக செயல்படுகிறதா? பாதிப்பை முன்கூட்டியே கண்டறியுங்கள், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்”. என்பது இந்த ஆண்டு உலக சிறுநீரக தினக் கருப்பொருளாக இருப்பதால், சிறுநீரக பாதிப்பு வராமல் முன்தடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெறுவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபட எடுத்துக்கூறி கற்பிப்பதே அப்போலோ டயாலிசிஸ் கிளினிக்குகள் நடத்திய இந்நடவடிக்கைகளின் நோக்கமாக இருந்தது. 

உடல்நலம் குறித்து இன்டராக்டிவ் அடிப்படையில், சிறுநீரகவியல் துறையின் முன்னணி மருத்துவ நிபுணர்கள் வழங்கிய சிறப்புரைகள், சிறுநீரகத்தைப் பாதிக்கும் இடர்க்காரணிகள், பாதிப்பை சுட்டிக்காட்டும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் குறித்த காலஅளவுகளில் சிறுநீரக செயல்பாட்டைக் கண்டறிவதற்கான சோதனைகளின் முக்கியத்துவம் ஆகிய அம்சங்களை அப்போலோ டயாலிசிஸ் கிளினிக் இந்த சிறப்புரைகள் மூலம் வலுவாக எடுத்துரைத்தது. நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) உள்ள நோயாளிகள் பின்பற்ற வேண்டிய சரியான உணவு முறையின் முக்கிய பங்கு குறித்து உணவுமுறை நிபுணர்களும் மற்றும் பிற மருத்துவ வல்லுநர்களும் உரையாற்றினர். சிறுநீரகத்திற்கு தோழமையான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை பேணி கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து மதிப்புமிக்க கருத்துகளையும், கண்ணோட்டங்களையும் அவர்கள் வழங்கினர்.  

சிறுநீரக பரிசோதனை செய்வது மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிவது ஆகியவற்றை ஊக்குவிக்க சுகாதார முகாம்களையும் அப்போலோ டாயலிசிஸ் கிளினிக்ஸ் நடத்தியது. இம்முகாம்களில் பங்கேற்றவர்களுக்கு இலவச சிறுநீரக இயக்க சோதனை, யூரியா மற்றும் கிரியாட்டினின் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அத்துடன், சாத்தியமுள்ள பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிவதன் அவசியம் அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த சுகாதார முகாமில் அப்போலோ டாயலிசிஸ் கிளினிக்ஸ் – ன் முதுநிலை சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் பேசுகையில், “நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவது குறித்தும் மற்றும் சிறுநீரக நோய் வராமல் முன்தடுப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிப்பது அத்தியாவசியம். உலக சிறுநீரக தினம் அனுசரிப்பின் அங்கமாக, நாங்கள் நடத்தும் முன்னெடுப்பு நடவடிக்கைகளின் மூலம் தங்களது சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு தேவையான அறிவையும், ஆதாரவளங்களையும் மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும்.” என்று கூறினார். 

அப்போலோ டாயலிசிஸ் கிளினிக்ஸ் – ன் தலைமை இயக்க அதிகாரி திரு. சுதாகர ராவ் இந்நிகழ்வில் பேசுகையில் கூறியதாவது: “சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட நபர்களுக்கு உயர்தர டாயலிசிஸ் சேவைகளை வழங்கும் எமது செயல்திட்டத்திற்கு இணக்கமாக, பல முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம். ஆரம்ப நிலையிலேயே சிறுநீரகப் பாதிப்பை கண்டறிவது மற்றும் பாதிப்பு வராமல் சிறுநீரகத்தைப் பாதுகாக்க முன்தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதும் எமது செயற்பணியாக இருந்து வருகிறது. எமது விரிவான கள தொடர்பு செயல்திட்டங்களின் மூலம் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு நாங்கள் வெற்றிகரமாக உதவியிருக்கிறோம். சிறுநீரக பாதுகாப்பு குறித்து ஆரோக்கிய தகவலை அவர்கள் பெறுவதையும் மற்றும் ஸ்க்ரீனிங் சோதனைகள் அவர்களுக்கு கிடைப்பதையும் நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்.” 

இந்த விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் பல்வேறு அமைவிடங்களில் 5,000+ யூரியா மற்றும் கிரியாட்டினின் பரிசோதனைகளை அப்போலோ டயாலிசிஸ் கிளினிக்ஸ் இலவசமாக நடத்தியிருக்கிறது; தங்களது சிறுநீரக ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யவும் மற்றும் உரிய நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சையைப் பெறவும் இது அவர்களுக்கு உதவியிருக்கிறது. சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர்களும், உணவுமுறை வல்லுநர்களும் பங்கேற்று நடத்திய சுகாதார முகாம்களும் மற்றும் உடல்நலம் குறித்த சிறப்புரைகளும் நாட்பட்ட சிறுநீரக நோய் பற்றிய தகவல்களை வழங்கின. பாதிப்பு வராமல் தடுப்பது, செய்ய வேண்டிய வாழ்க்கை முறை திருத்தங்கள் மற்றும் பாதிப்பின் ஆரம்பநிலை எச்சரிக்கை அறிகுறிகள் ஆகியவை குறித்து சிறப்பான தகவல்களை மக்களுக்கு எடுத்துரைத்தன.  

“சிறுநீரக ஆரோக்கியத்திற்கான ஸ்க்ரீனிங் சோதனைகளை எளிதில் பெறத்தக்கதாக ஆக்கியிருப்பதன் மூலம் நமது சமூகத்தினரின் நலவாழ்விற்கு பங்களிப்பு செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். முன்தடுப்பு ஆரோக்கியப் பராமரிப்பு மீதான எமது பொறுப்புறுதி எப்போதும் மிக உறுதியாக இருந்து வருகிறது; சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணர்வையும் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவதையும் முன்னிலைப்படுத்துகின்ற நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்கிறோம்.” என்று திரு. ராவ் மேலும் கூறினார். 

தரமான டயாலிசிஸ் சிகிச்சையை வழங்கும் தனது செயற்பணியில் அப்போலோ டயாலிசிஸ் கிளினிக் தொடர்ந்து தீவிர அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறது; அதே வேளையில், அதிகரித்து வரும் சுமையான சிறுநீரக நோயை திறம்பட எதிர்த்துப் போரிட பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் திட்டங்களையும் தன்முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது. சிறுநீரக ஆரோக்கியம் குறித்த கல்வி அமர்வுகள், உடல்நல பரிசோதனை திட்டங்கள் மற்றும் அத்தியாவசிய சுகாதார சாதனத்தொகுப்புகளின் வினியோகம், ஆகியவற்றின் வழியாக வசதியற்ற சமூகத்தினருக்கு ஆதரவையும் இதன் பெருநிறுவன சமூகப் பொறுப்புறுதி செயல்பாடுகள் வழங்கி வருகின்றன.  


கருத்துகள் இல்லை