சற்று முன்



சுழல் 2' திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் பிரபல வெப் சீரிஸ் ஆன சுழல் பாகம் ஒன்றை தொடர்ந்து 'சுழல் 2' என்பது புஷ்கர் மற்றும் காயத்ரி குழுவினரால் உருவாக்கப்பட்ட ஒரு த்ரில்லர் இணையத் தொடர் ஆகும். 

முன்னணி நடிகரான கதிர் , நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் , லால் , கயல் சந்திரன் , மஞ்சுமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .

கதையின் ஆரம்பமே

 தூத்துக்குடி மாவட்டத்தில் பிரபல வழக்கறிஞர் லால் அவர்களின் கொலைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் கதிர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் ஆகியோர் இந்த கொலை வழக்கை விசாரிக்கின்றனர். விசாரணையின் போது, லால் அவர்களின் வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் கௌரி கிஷன் இருப்பதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அவரை கைது செய்த பின்னரும், கொலைக்கான உண்மையான பின்னணி மற்றும் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் குழு பல சவால்களை எதிர்கொள்கிறது இறுதியில் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை கதை !

இந்த தொடரின் 8 எப்பிசோட்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை மையமாகக் கொண்டு, பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக நகர்கின்றன. முதல் பாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த தனது சித்தப்பாவை கொலை செய்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த பாகத்தில் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவரது கதாபாத்திரம், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சரவணனின் எதிர்பார்க்காத திருப்பம், லால் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கொலை வழக்கில் சரணடையும் 8 இளம் பெண்கள் ஆகியோரின் கதைகள், தொடரின் திரைக்கதையை உயிரோட்டமாக்குகின்றன. மிக அழுத்தமாக இயக்குனர் கூறியுள்ளார். 

நடிகர் கதிர் மிக நன்றாக நடித்துள்ளார் கதாபாத்திரம் மிகச் சிறப்பு. 

லால் மிக நன்றாக நடித்துள்ளார் கதைக்கு ஏற்ப கச்சிதமாக பொருந்தி உள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் மிக நன்றாக நடித்துள்ளார். 

மஞ்சுமா மோகன் கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது வெப் சீரியஸ் இருக்கு அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய ஹைலைட். 

கயல் சந்திரன் மற்றும் மஞ்சுமா  காதல் காட்சிகள் மிக நன்றாக உள்ளது. 

'சுழல் 2' தொடரை Amazon Prime Video ஓடிடி தளங்களில் பார்க்க முடியும். தற்பொழுது பார்த்து மகிழுங்கள். 

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை