Neek திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் இயக்குனர் பலமுகங்கள் கொண்ட தனுஷ் இயக்கத்தில் தயாரிப்பில் Neek
அறிமுக நாயகன் பவிஷ் , அனிகா சுரேந்திரன் , பிரியா வாரியர் , மேத்யூஸ் , சரத்குமார் , ஆடுகளம் நரேன் , சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பவிஷ், அனிகா, பிரியா ஆகிய கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான பயணம், பிரிவும் மீண்டும் சந்திப்பும், யாரை தேர்வு செய்கிறார் பவிஷ் என்பதே கதையின் மையப் பொருள் உள்ளது.
பவிஷ் மிக நன்றாக நடித்துள்ளார் இவரை பார்க்கும் பொழுது இவரது மாமன் தனுஷ் சாயில் உள்ளது. நடிப்பிலும் சரி பேச்சிலும் சரி இளம் வயது தனுசை பார்ப்பது போல் உள்ளது.
அனிகா மிக நன்றாக நடித்துள்ளார் அவரது காதல் காட்சிகள் மற்றும் தந்தைக்கும் மகளுக்குமான பாசப்போர் அனைத்தும் சிறப்பு உணவு பூர்வமாக எதார்த்தமாக நடித்துள்ளார் அனிகா மற்றும் சரத்குமார். தந்தை மகள் பாசம்.
பிரியா வாரியர் மிக அழகாக உள்ளார் அவரது காட்சிகள் அனைத்தும் சிறப்பு மிக எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளார்.
ஜிவி பிரகாஷின் இசை முக்கியமான பல இடங்களில் உணர்வுகளை உயர்த்தி இருக்கும் போல.
ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கதைக்கு தேவையான அழகை கொடுத்திருக்கிறார்.
பவிஷ் மற்றும் மேத்யூஸ் இருவருடைய காட்சிகள் மிக நன்றாக உள்ளது நட்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இவர்களது காட்சிகள் வசனங்கள் வரும்போது திரையரங்குகளில் விசில் பறக்கும்.
இந்தக் கதையின் மூலம் என்ன? பவிஷ் அனிகாவைத் திரும்ப பெறுகிறானா? அல்லது பிரியாவுடன் புதிய தொடக்கம் செய்கிறானா? இது முடிவு செய்யும் முக்கியமான அம்சம் போல!
இயக்குனர் தனுஷ் மிக நன்றாக எடுத்துள்ளார் அனைத்து காட்சிகளும் சிறப்பு காதல் காட்சிகள் உணர்வுபூர்வமான தந்தை மகள் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.
இக்காலகட்டத்தில் இது போன்ற திரைப்படங்கள் சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் மற்றும் அமைந்துள்ளது.
ஏர்போர்ட் சீன் கொஞ்சம் “ஓவர்” போல தோன்றினாலும், பார்ட் 2க்கான ஆவலை ஏற்படுத்தும் சூழ்நிலை கொடுத்திருக்கிறது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை