சற்று முன்



ஃபயர் (FIRE 🔥)திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் பிக் பாஸ் புகழ் பாலாஜி நடிப்பில் ஃபயர் மற்றும் நடிகை ரக்ஷிதா , சாக்ஷி அகர்வால் , சாந்தினி , கௌரி ஷான் ,  ஜே எஸ் கே சதீஷ் , சுரேஷ் சக்கரவர்த்தி , சிங்கம்புலி  மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஜே எஸ் கே சதீஷ்.

கதை ஆரம்பமே

பாலாஜி முருகதாஸ் ஒரு பிசியோதெரபிஸ்ட் டாக்டர்.. இவரது பெயர் காசி.. தன்னிடம் சிகிச்சைக்காக ஒரு பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களுடன் உடலுறவு வைத்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவது இவரது வழக்கம்.. இவரது காதல் வலையில் விழுந்த பெண்கள் பலர்.

திருமணமாகாத சாந்தினி இவரது கிளினிக்கில் வேலை பார்க்கிறார் அவரையும் படம் பிடித்து மிரட்டுகிற வேறு வழி என்று இவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

கணவனால் கைவிடப்பட்ட ரக்ஷிதா இவரது காதல் வலையில் விழுகிறார்..

வெளிநாட்டில் கணவன் இருப்பதால் சாக்ஷியும் ஒரு கட்டத்தில் பாலாஜியின்  வலையில் சிக்கிக் கொள்கிறார் .

கௌரி ஷான் கணவனை இழந்து வாழும் கௌரியையும் விட்டு வைக்கவில்லை பாலாஜி.

இந்தப் பெண்கள் மட்டும் இலலாமல் மற்றும் மாணவிகள் உடன் வேலை பார்த்தவர்கள் போன்ற நிறைய பெண்களை ஏமாற்றி உள்ளார் பாலாஜி.

இந்தப் பெண்கள் பாலாஜியின் மிரட்டலுக்கு பயந்து தவிக்கும் நிலையில் திடீரென பாலாஜி காணாமல் போகிறார்.. அவரை கொன்று விட்டதாகவும் தகவல்கள் வருகின்றது.. இதற்கான விசாரணை இறங்குகிறார் போலீஸ் ஜே எஸ் கே.. 

அடுத்தது என்ன நடந்தது?பாலாஜி காணாமல் போனது எப்படி? அவரை  கடத்தியது யார்? அவர் நிஜமாகவே கொல்லப்பட்டாரா? என்ற பல திருப்பங்களுடன் கதை சொல்லி  இருக்கிறார் இயக்குனர். இறுதியில் என்ன நடந்தது என்பதே கதை.

 பிளேபாய் கேரக்டரை பக்காவாக செய்திருக்கிறார் பாலாஜி மிக நன்றாக நடித்துள்ளார். 

சின்னத்திரையில் ரசித்துப் பார்த்த ரக்ஷிதா இதில் கவர்ச்சி மழையில் நனைய விட்டுள்ளார்.. ஹோம்லி மட்டுமல்ல கிளாமர்லிலும் நான் அசத்துவேன் என்று காட்டிவிட்டார்...

சாக்ஷி அகர்வால் மிக நன்றாக நடித்துள்ளார் கிளாமரிலும் அசத்தியுள்ளார். 

சாந்தினி மற்றும் கௌரி ஷான் இருவரும் கிளாமரிலும் அசத்தியுள்ளனர் நன்றாக நடித்துள்ளனர். 

நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி சிறிது நேரம் வந்தாலும் மிக நன்றாக நடித்துள்ளார்.

அரசியல்வாதியாக சிங்கம் புலி நன்றாக நடித்துள்ளார் அவரது காமெடி இப்படத்தில் சிறப்பு. 

  இசை  மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. பாடல்கள் நன்றாக உள்ளது.

இத்திரைப்படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3.5 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை