சற்று முன்



ராமம் ராகவம் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர் நடிகர் பல முகங்கள் கொண்ட சமுத்திரகனி நடிப்பில் ‘ராமம் ராகவம்’. மற்றும் தன்ராஜ் , மோக்‌ஷா ,சுனில், பிரமோதினி, ஹரீஸ் உத்தமன் ,சத்யா ,ஸ்ரீனிவாஸ் ரெட்டி , பிரித்விராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனராக இயக்கியுள்ளார் தன்ராஜ்கொரனானி .

 சமுத்திரக்கனி படங்களில் எப்போதுமே ஒரு தாக்கம் இருக்கும், அதுவும் இப்படி ஒரு தந்தை-மகன் உறவுக்காக உருவான கதையில் அவருடைய நடிப்பு ஒரு முக்கியமான பங்காக இருக்கும்.

படத்தின் கரு ராமாயணத்திலிருந்து வெளிப்படும் ஒப்பீடுகளை முன்வைக்கிறது என்பது ஆர்வமூட்டுகிறது. தசரதராமன் என்ற பெயரே கதையின் அடிப்படையை சொல்வது போல இருக்கிறது – தந்தையின் அன்பு, குற்ற உணர்வு, மகனுக்காக செய்யும் தியாகம் எல்லாம் கதையில் வலுவாக அமைகிறது .

மற்றுமொரு முக்கிய அம்சம் இயக்குநர் தனராஜ் கொரனானியின் கதையை நேர்த்தியாக சொல்லும் விதம். முதல் படமாக இருந்தாலும், அவரது அனுபவம் இந்த படத்தில் தெரிகிறது .

தந்தைக்கு மகனுக்குமான பாச போர் தான் இத்திரைப்படம் மிக அழகாக இயக்கியுள்ளார் இயக்குனர் தன்ராஜ். 

மகனுக்காக எதையும் செய்வேன் என்று இருக்கும் தந்தையாக வாழ்ந்துள்ளார் கதாபாத்திரமாகவே இருக்கிறார் சமுத்திரக்கனி.

பிரமோதினி அம்மாவாக நடித்துள்ளார் கதைக்கேற்ப மிக கச்சிதமாக பொருந்தி உளளார். அம்மாவாகவே வாழ்ந்துள்ளார். 

சுனில் சிறிது நேரம் வந்தாலும் அவரது கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது. 

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக நடித்துள்ளனர். 

திரைப்படம் தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பாசப்போர்தான் ராமம் ராகவம்.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம் 

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை