பேபி & பேபி திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான நடிகர் ஜெய் நடிப்பில் பேபி& பேபி மற்றும் பிரக்யா ,யோகி பாபு, சத்யராஜ்,சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இளவரசு, சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சேசு மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரதாப்.
இந்தக் கதையைப் பார்த்தால், குடும்பம், ஜாதகம், பாசம், கோபம், தவறான புரிந்துகொள்ளல்கள், மற்றும் பின் ஏற்பட்ட குழப்பங்களைச் சுற்றி பின்னப்பட்ட ஒரு குடும்பக் கதையாக இருக்கிறது.
கதை சுருக்கம்:
சத்யராஜ் தனது ஜமீன் குடும்ப மரபைப் பாதுகாக்க விரும்புகிறார். ஆனால் மகன் ஜெய், பிரக்யாவை காதலித்து திருமணம் செய்து, தந்தையின் எதிர்ப்பால் வெளிநாட்டிற்கு செல்கிறார். இந்த கோபத்துடன் இருந்த சத்யராஜ், ஜெய்க்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் மகிழ்ச்சி அடைந்து, அவரை திரும்பி வர அழைக்கிறார்.
அதே நேரத்தில், யோகிபாபுவும், ஜாதகம் காரணமாக வெளிநாடு சென்று, அங்கு சாய் தன்யாவை திருமணம் செய்கிறார். ஜாதகப்படி பெண் குழந்தை பிறந்ததும், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக ஜெய், யோகிபாபு குடும்பங்களின் குழந்தைகள் மாறிவிடுகின்றன.
தொடர்ந்து நடக்கும் திருப்பங்களும் உணர்ச்சிப் பாய்ச்சலும் கதையில் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
ஜெய்: காதலுக்கும் குடும்பத்திற்கும் இடையே சிக்கிய கதாநாயகன் மிக நன்றாக நடித்துள்ளார் அழகாக உள்ளார்.
சத்யராஜ்: கடும்பanay மரபு, கோபம், பாசம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தந்தை. தந்தையாக கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
யோகிபாபு: காமெடியுடன் சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்கிறார்.
ஆனந்தராஜ், ரெட்டின் கிங்ஸ்லி சிங்கம்புலி , ராமர் அனைவரும் அவர் கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்துள்ளனர்.
குடும்ப உறவுகளை, நம்பிக்கைகளை, தவறுகள், மாறிய குழந்தைகள் தொடர்பான கலக்கத்தை காமெடி, உணர்ச்சி கலந்து சொல்லியிருக்கும் குடும்ப திரைப்படம்.
ஆக மொத்தத்தில் அனைவரும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை