சற்று முன்



விடாமுயற்சி திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் விடா முயற்சி. 

அஜித்தின் திரைப்படம் இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகி உள்ளது. 

அவரது ரசிகர்களுக்கு திரைப்படம் வெளியீட்டு நாளே தீபாவளி பொங்கல் அனைத்தும். 

மற்றும் நடிகை திரிஷா , ஆக்ஷன் கிங் அர்ஜூன் , ரெஜினா , ஆர்நவ் , ரம்யா  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்குனர் மகில் திருமேனி இயக்கியுள்ளார். 

கதையின் ஆரம்பமே 

அர்ஜுன் (அஜித்) , கயல் (திரிஷா) ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கும் கணவர் மனைவியாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது.

இவர்கள் இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்து திரிஷா தன் தந்தை வீட்டுக்கு செல்கிறேன் எனக்கு இந்த வாழ்க்கை இஷ்டம் இல்லை என்று கூறுகிறார் சரி நானே உன்னை அழைத்து உன் வீட்டில் விடுகிறேன் என்று அஜித் கூறுகிறார்.

 இருவரும்  நீண்ட பயணம் செல்லும் போது இவர்களின் கார் பாலைவனத்திற்கு நடுவே நின்று விடுகிறது. அப்போது ட்ரக்கில் ரக்ஷித் (அர்ஜுன்) மற்றும் ரெஜினா  வருகிறார்கள். அவர் இருவருக்கும் உதவி செய்ய முன் வருகிறார். இதனால் திரிஷாவை அவரது வாகனத்தில் அஜித் ஏற்றி அனுப்பிவிடுகிறார். தனது மனைவியை அழைத்து சென்ற பின்னர் அவர் அவரின் ட்ராக்கில் திரிஷாவை ரக்ஷித் (அர்ஜுன்) மீண்டும் வந்து தன்னையும் அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் திரும்பி வராததால் தனது மனைவியை தேடி செல்கிறார் அஜித். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.


நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை பழைய அஜித்தை பார்த்து உள்ளோம் அவரது ஹேர் ஸ்டைல் அவரது ரசிகர்களுக்கு இதுவே மிகப்பெரிய விருந்து. 

அஜித் படத்தில் மிக எதார்த்தமாக நடித்துள்ளார் கணவன் மனைவிக்கு உண்டான பாசப்போரில் அவரது நடிப்பு மிகச் சிறப்பு. 

திரிஷா மிக அழகாக உள்ளார். அவரது கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது. 

அர்ஜுன் மங்காத்தா க்கு பிறகு அஜித்துடன் இணைந்துள்ளார் அந்த காம்போ  இதில் சிறப்பாக அமைந்துள்ளது. 

ரெஜினா மிக நன்றாக நடித்துள்ளார் அவரது நடிப்பு கதாபாத்திரம் கதைக்கேற்ப கச்சிதமாக பொருந்தியுள்ளார். 

ஆர்நவ் இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் சிறப்பாக  நடித்துள்ளார் அஜித்துடன் மோதும் காட்சிகள் அவர் கூறும் வசனங்கள் மிக நன்றாக உள்ளது. 

இப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் மிக நன்றாக நடித்துள்ளனர். 

இரண்டு வருடங்களுக்கு கழித்து வந்த அஜித் படம். ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை