சற்று முன்



தண்டேல் திரை விமர்சனம் !

 தமிழ் சினிமா உலகில் தெலுங்கு டப்பிங் படமான நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தண்டேல் 

மற்றும் நடிகை சாய் பல்லவி , பப்லு , கருணாகரன் , ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை ஆரம்பமே

ஶ்ரீகாகுளம் என்கிற சிறிய கிராமத்தை சேர்ந்த மீனவர் ராஜூ (நாக சைதன்யா). ராஜூ மற்றும் சத்யா (சாய் பல்லவி) இருவரும் காதலித்து வருகிறார். ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது ராஜூவின் தொழில். வருடத்தில் பெரும்பாலான மாதங்களை கடலில் கழிக்கும் ராஜூ மிச்சமிருக்கும் கொஞ்ச நாட்களை தனது காதலியுடன் மகிழ்ச்சியாக செலவிடுகிறார். எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு நிகழ்விற்கு பின் ராஜூவை இனி கடலுக்கு போக வேண்டாம் என்று சொல்கிறார் சத்யா. ஆனால் அவள் பேச்சை கேட்காமல் ராஜூ கடலுக்குள் செல்கிறான். கடலுக்குள் சென்ற ராஜூவின் குழு புயலில் மாட்டிக் கொள்கிறது. பின் பாகிஸ்தான் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சிறையில் ராஜூவும் அவனது குழுவும் சந்தித்த கொடுமைகள் ஒருப்பக்கம் என்றால் இன்னொரு பக்கம் தனது காதலனை பிரிந்து இருக்கும் சத்யா எதிர்கொள்ளும் சவால்கள் என தொடர்கிறது படம். சத்யா மற்றும் ராஜூ இருவரும் சேர்ந்தார்களா என்பதே தண்டேல் படத்தின் கதை.

நடிகர் நாக சைதன்யா மிக நன்றாக நடித்துள்ளார் அவரது சண்டை காட்சிகள் அற்புதம் . கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் நாக சைதன்யா. 

சாய் பல்லவி மிக நன்றாக நடித்துள்ளார் காதல் காட்சிகள் உணர்வு, பாசம் மற்றும் அவரது பாடல் அனைத்தும் நன்றாக உள்ளது. 

ஓம் நமசிவாய பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது அப்பாடல் மிக நன்றாக உள்ளது சாய் பல்லவியும் நாகச் சைதன்யாவும் மிக நன்றாக நடனமாடியுள்ளனர். 

ஆடுகளம் நரேன் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர். 

கருணாகரன் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளார் கதைக்கேற்ப கச்சிதமாக பொருந்தி உள்ளார். 

இப்படத்தில் தேசப்பற்று அனைத்தும்  இருக்கிறது. 

ஆக மொத்தத்தில் ஆக்சன் காதல் திரில்லர் ரசிகர்களுக்கு திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை