தினசரி திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக இருப்பவர் நடிகர் ஸ்ரீகாந்த் அவரது நடிப்பில் தினசரி . மற்றும் நடிகை சிந்தியா லூர்தே , பிரேம்ஜி , எம்.எஸ். பாஸ்கர் , மீரா கிருஷ்ணன் , சாந்தினி , சம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜி சங்கர்.
கதை ஆரம்பமே :
ஐடி துறையில் பணியாற்றும் நாயகன் ஸ்ரீகாந்த் போதுமான அளவுக்கு சம்பளம் வாங்கினாலும், வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல வேண்டும், என்று ஆசைப்படுகிறார். அதற்காக தனக்கு மனைவியாக வரும் பெண் தன்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும், என்று நினைக்கிறார். நாயகி சிந்தியா லூர்தே அதிகமான சம்பளத்துடன் நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லாமல், கணவன் மற்றும் குடும்பத்தாரை கவனித்துக் கொண்டு வாழ வேண்டும் நினைக்கிறார். எதிர்மறை எண்ணங்களுடன் இருக்கும் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவரது எண்ணங்களும் தெரிய வருகிறது. அதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட, அதில் இருந்து மீண்டார்களா? இல்லையா ? என்பதே படத்தின் கதை ?
நடிகர் ஸ்ரீகாந்த் மிக நன்றாக நடித்துள்ளார் அவரது கதாபாத்திரம் சிறப்பு மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
நடிகை சிந்தியா லூர்தே கதைக்கேற்ப கச்சிதமாக பொருந்தியுள்ளார் மிக எதார்த்தமாக நடித்துள்ளார்.
எம் எஸ் பாஸ்கர் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் ஒரு தந்தையாக அவரது கதாபாத்திரம் சிறப்பு.
மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் அவர் கொடுத்த வேலையை மிக கச்சிதமாக செய்துள்ளனர்.
சாந்தினி மிக நன்றாக நடித்துள்ளார் அழகாக உள்ளார்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
இத்திரைப்படம் அனைவரது வாழ்விலும் பொருந்தும் நடுத்தர குடும்பத்தில் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் இத்திரைப்படம் சமர்ப்பணம்.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை