சற்று முன்



பாட்டில் ராதா திரை விமர்சனம் !

 


தமிழ் சினிமா உலகில் முன்னணி குணச்சித்திர நடிகர் ஆன குரு சோமசுந்தரம் நடிப்பில் பாட்டில் ராதா 

நடிகை  சாஞ்சனா நடராஜன் , ஜான் விஜய் , மனோகர், மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம். 

திரைப்படத்தை தயாரித்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித். 

கொத்தனாராக தனது வாழ்க்கையை முன்னேற்றும் ராதாமணி, குடி பழக்கத்தால் தனது வாழ்க்கையை முற்றிலும் அழிக்கிறான்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முதன்மை காரணமாகவும் காணப்படுகிறான்.

தனது கணவனின் பழக்கத்தை மாற்ற முயற்சிக்கும் மனைவியின் மனநிலை, சகிப்புத்தன்மை மற்றும் தியாகம். 

ஒரு முடிவை எடுக்கும் ஆழமான பாசம் மற்றும் கடமை உணர்வு.

மறுவாழ்வு மையத்தில் அனுப்புவதன் மூலம் இதற்கு ஒரு முடிவு வரும் என்று நினைக்கிறாள்.

மறுவாழ்வு மையத்தில் தன்னுடைய பழக்கத்தை மாற்ற முடியாத மனநிலையுடன் போராடுகிறான் ராதா.

மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பித்துப் பிறகு அவர் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாரா இல்லையா என்பதே கதை ?

குரு  சோமசுந்தரம் மிக நன்றாக நடித்துள்ளார் கதைக்கேற்ப கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

மனைவி கதாபாத்திரம் மிக அற்புதமாக நடித்துள்ளார் வாழ்ந்துள்ளார் என்று கூறலாம்.

நடிகர் ஜான் வஜய் இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும் அவரது கதாபாத்திரம் சிறப்பு. 

மறுவாழ்வு மையத்தில் இவர்கள் செய்யும் லூட்டி செயற்கை அனைத்தும் நன்றாக உள்ளது. 

மறுவாழ்வு மையத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. 

குடி பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படி சிதைகிறது என்பதை நுட்பமாக காட்டும்.

மறுவாழ்வு மையத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகப் பார்வை. 

குடும்ப அன்பு மற்றும் பொறுப்பின் வெளிப்பாடு.

 ராதாமணி தனது பழக்கத்தை முற்றிலும் நிறுத்தி, குடும்பத்துடன் மீண்டும் இணைந்து வாழ்க்கையை முன்னேற்றுகிறார்.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம். 

Rating : 3 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை