சற்று முன்



காதலிக்க நேரமில்லை திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகன் ஆன ரவி மோகன் நடிப்பில் காதலிக்க நேரமில்லை. நடிகை நித்தியா மேனன் , லால் , லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, யோகி பாபு, வினை மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி .

  கதையின் மையக்கருத்தில் குழந்தை வளர்ப்பு, திருமணத்தின் கட்டாயம், மற்றும் தனிமனித விருப்பங்களை சுதந்திரமாக விரிவாக கையாளும் விதம் மக்கள் மத்தியில் விவாதத்திற்கு வழிவகுக்கும்.

நாயகன் ரவி மோகனின் கருத்துகள் மற்றும் நாயகி நித்யா மேனனின் செயற்பாடுகள் கதை அமைப்பின் மையத்தை இயக்குகின்றன. படத்தில் ஒழுங்கான எமோஷனல் மற்றும் சமூக பிரச்சினைகள் கவனமாக கையாளப்பட்டுள்ளன. குறிப்பாக, தாய் சுதந்திரம், தன் பாலின உறவுகள், மற்றும் செயற்கை கருத்தரிப்பு போன்ற விவாதத்துக்குரிய தலைப்புகளை திரைக்கதையில் சேர்த்திருப்பது பாராட்டத்தக்கது.

நடிகர் யோகி பாபு வரும் காட்சிகள் எல்லாம் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். 

படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அவர் கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்துள்ளனர். 

கிருத்திகா உதயநிதியின் இயக்கம், வலுவான திரைக்கதை, மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமான செயல்பாடுகள் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் படி அமைந்துள்ளது. இது தற்கால சமூகத்தின் கருத்துகளை மாறாக சித்தரிக்க ஒரு முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தப் படம், "காதலிக்க நேரமில்லை", ஒரு சமூகப்பெருக்கமளிக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்து, பலரின் மனதில் நீண்டநாள் நீடிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது.

Rating : 3 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை