சற்று முன்



ராமாயணம் திரை விமர்சனம் !



ராமாயணத்தின் 2D அனிமேஷனை விளக்குவதில் மிக அழகாக இருக்கின்றன.

கதாபாத்திரங்கள் : 

ராமன் , தேவி சீதா , லட்சுமணன் , தசரத ராஜா , பரதன் , ராவணன் , அனுமான் , மண்டோதரி , இந்திரஜித் , சொற்பநகை , வாலி , யுதிஷ்டனர் , அசுரகுரு சுக்ராச்சாரியார் , கும்பகர்ணன் , மற்றும் பலர் கதாபாத்திரம் உள்ளன. 

 பாரம்பரிய காவியங்களை இத்தகைய முறையில் புதிய தலைமுறைக்கு கொண்டு செல்வது மிகவும் பயனுள்ள முயற்சியாகும். குறிப்பாக, குழந்தைகளின் மனதை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அனுமானின் சேட்டைகள், வானரப் படைகளின் அசைவுகள், மற்றும் கும்பகர்ணனின் வேடிக்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

அதோடு, ராமன்-லட்சுமணன் உறவின் உணர்ச்சிகரமான தோற்றம், குடும்ப பாசத்தைச் சிறப்பாகக் காட்டுவதால், பெரியவர்களையும் இணைப்பதில் வெற்றி அடைகிறது. அனுமான் இமயமலையில் இருந்து மலை கொண்டு வரும் காட்சி மட்டும் இல்லாமல், அவரது வேகமான செயல்பாடுகள் அனைத்தும் கதைக்கு உயிர் சேர்க்கின்றன.

பத்து தல ராவணனின் பலத்தை இந்த அனிமேஷன் படத்தில் காணலாம். 

ராவணன் மிகப்பெரிய சிவன் பக்தர் மற்றும் இலங்கையின் அரசர் அதிபதி அனைத்தும் குழந்தைகளுக்கு நன்றாக அறியும். இத் திரைப்படம் மூலமாக. 

இறுதியில், ராமன் மற்றும் ராவணன் இடையே நடக்கும் போர்க்களக் காட்சிகள் மட்டுமின்றி, அந்தக் கோபத்தின் பின்னால் உள்ள கருத்தையும் சொல்ல முயற்சித்திருப்பது இதை ஒரு திகில் நிறைந்த அனுபவமாக மாற்றுகிறது.

இந்த அனிமேஷனில்  பிடித்தவை என்றால் அனுமான் மற்றும் கும்பகர்ணன் காட்சிகள்தான், ஏனெனில் அவை மட்டுமின்றி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் பரபரப்பையும் தருகின்றன. 

ஆக மொத்தத்தில் ராமாயணம் குழந்தைகளுக்கான திரைப்படமாக அமைந்துள்ளது.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை