சற்று முன்



வல்லான் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனரான சுந்தர்.சி நடிப்பில்  வல்லான்  

நடிகை தன்யா ஹாப் , சாந்தினி , தலைவாசல் விஜய் , கமல் காமராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்  விர. மணி சீயோன் 

கதையின் ஆரம்பமே  :

 தொழிலதிபர் கமல் காமராஜ் கொலையின் மர்மம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சுந்தர்.சி எதிர்கொள்ளும் சவால்கள்.

 அரசியல் சதி, அதிகார துஷ்பிரயோகம், மற்றும் நியாயத்திற்கான போராட்டம்.

சுந்தர்.சி ஒரு பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியாக மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்வின் சிக்கல்களுடன் கதையின் நாயகனாக தோன்றுவது இத்திரைப்படத்தின் மையப் பொறியாக செயல்படுகிறது. அவரது நடிப்பு மற்றும் அடுத்தடுத்த திருப்பங்களின் மூலம், கதையை முன்னேற்றும் விதம் பாராட்டத்தக்கது.

ஒளிப்பதிவு, காட்சிகளின் தரம் மற்றும் சண்டைக் காட்சிகள் தரமான வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன

பின்னணி இசையும் திரைக்கதையுடன் அழகாக இணைந்து பயணிக்கிறது.

சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் பிரிவில் கதைக்களம் நன்றாக உள்ளது.

 பட்டேலின் காட்சிகள் படத்துக்கு பெரிதாக எந்த பாதிப்பையும் செய்யவில்லை என்பது குறிப்பு.

இந்த மாதிரியான திரைக்கதைகள் தமிழ் சினிமாவில் பொதுவாக அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன, குறிப்பாக சஸ்பென்ஸ் மற்றும் மெய்சிலிர்க்கும் திருப்பங்கள் கொண்ட படங்கள் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன.

ஆக மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர்  ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது இத்திரைப்படம்.

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை