சற்று முன்



தருணம் திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான கிஷான் தாஸ் நடிப்பில் தருணம் .  நடிகை ஸ்ம்ருதி வெங்கட் , கீதா கைலாசம் , பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.

கதையின் நாயகன் அர்ஜுன் பணியிட நீக்கத்தில் இருக்கும் ஒரு காவல் அதிகாரி. 

இவர் காவல் அதிகாரி என்பதால் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. 

இதனால் அர்ஜுன் குடும்பத்தினர் பெற்றோர் காவல் அதிகாரி என்பதை மறைத்து விட்டு மீரா என்கிற பெண்ணை பார்க்கிறார்கள். 

மீராவுக்கு அர்ஜனை பிடித்து விடுகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொடங்குகிறார்கள்.

மீராவின் நண்பனான ரோஹித் மீராவை அடைய ஆசைப்படுகிறான். 

ஒரு நாள் ரோகித் மீரா மீது அத்துமீறி தவறாக  நடந்து கொள்ளும் முயற்சித்ததால் இருவருக்கு இடையே சண்டை வருகிறது. சண்டை போடும் போது மீரா தள்ளி விடும்போது அடிபட்டு இறந்து விடுகிறார் ரோகித்.

இதனை அறிந்த அர்ஜுன் மீராவை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.

நடிகர் கிஷான் தாஸ் நன்றாக நடித்துள்ளார் அவரது நடிப்பு சிறப்பு. 

ஸ்ம்ருதி வெங்கட் மிக அழகாக உள்ளார் அவரது கதாபாத்திரம் நன்றாக உள்ளது நடிப்பும் சிறப்பு. 

கீதா கைலாசம் அவருக்கு கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்துள்ளார். 

மற்ற அனைத்து நடிகர்களும் அவரது கதாபாத்திரம் சிறப்பாக செய்துள்ளனர். 

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. 

திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம். 

Rating : 3 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை