மெட்ராஸ்காரன் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் நடிகரான கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் மெட்ராஸ்காரன்.
நடிகர் ஷேன் நிகாம் , நிஹாரிக்கா , ஐஸ்வர்யா தாத்தா , கருணாஸ் , பாண்டியராஜன் , சூப்பர் சுப்பராயன் , கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர் . இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வாலி மோகன் தாஸ் .
கதை ஆரம்பமே புதுக்கோட்டையில் தான்.
ஒரு கல்யாண வீடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆரம்பித்த மெட்ராஸ்காரன்.
இந்தப் படத்தின் கதையை ஒரு சிந்தனைக்குரிய சமூகக் கதையாக சித்தரிக்க முயற்சித்த விதம், அதற்கான கலையரசன், ஷேன் நிகாம் ஆகியோரின் நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை எல்லாம் நல்ல வகையில் அமைந்துள்ளன .
இயக்குநர் இன்னும் நேர்த்தியாக திரைக்கதை அமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது.
மேலும், கதாநாயகர்களின் கேரக்டரையும் நுணுக்கமாக உருவாக்கி இருந்தால், படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்க வாய்ப்புள்ளது.
சண்டைக் காட்சிகள் மிக அற்புதமாக உள்ளது.
கலையரசன் தனக்கு கொடுத்த வேலை மிகச்சிதமாக செய்துள்ளார்.
90ஸ் கிட்ஸ் இன் காதல் சடுகுடு கனவு பாடல் இப்பொழுது 2k கிட்ஸ் இருக்கு விருந்தாக அமைந்துள்ளது. பாடல் நன்றாக உள்ளது.
இப்படத்தில் பாடல்கள் பிளஸ் ஆக அமைந்துள்ளது.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
கடைசியாக, ஒரு விபத்திற்குப் பின்னால் மறைந்த உண்மைகளை வெளிச்சம் போட்டு, மனதைக் குலைக்கும் சமுதாயக் கருத்துக்களை உரையாடல் மூலம் மேலெழுப்பியிருப்பது மனம் தொட்டிருக்கும் செய்தியாக இருக்கிறது. இது எப்படி மக்கள் மனதில் படைப்பை நிலைநிறுத்தும் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
இத்திரைப்படம் ஆக்சன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை