சற்று முன்



தமிழ்நாட்டில் பெண் டெலிவரி கூட்டாளர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ஃபெமி9 உடன் இணைந்து ஸோமேட்டோ செயல்படுகிறது !

தமிழ்நாட்டில் பெண் டெலிவரி கூட்டாளர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ஃபெமி9 உடன் இணைந்து ஸோமேட்டோ செயல்படுகிறது !

கிக் பணியாளர்களில் பெண்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதவிடாய் புராடக்டுகளை பெறுவதை உறுதி செய்வது இம்முன்முயற்சியின் நோக்கமாகும் 

India, 2024: இந்தியாவின் ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான ஸோமேட்டோ, ஆரோக்கியமான மாதவிடாய் தூய்மைப் பழக்கங்களை ஊக்குவிக்க ஃபெமி9 உடன் இணைந்து செயல்படுகிறது, அதன்படி ஸோமேட்டோ தமிழ்நாட்டில் பெண் டெலிவரி கூட்டாளர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும். ஃபெமி9 மெகா கொண்டாட்ட நிகழ்வு 2இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முன்முயற்சி, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதவிடாய் புராடக்டுகளை தொடர்ந்து அணுகுவதை உறுதி செய்வதன் மூலம் கிக் (தற்காலிகப்) பணியாளர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்த முன்முயற்சியின் கீழ், ஸோமேட்டோவில் பணிபுரியும் பெண் டெலிவரி கூட்டாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும், மேலும் மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் கல்வி கற்பிப்பதற்கும் சுகாதார உதவிக் குறிப்புகள் அடங்கிய ”பீ எ கிராம்பியன்” ("Be a Cramp-ion") என்ற தலைப்பிலான ஒரு துண்டுப்பிரசுரமும் வழங்கப்படும். 

"ஸோமேட்டோவில், குறிப்பாக எங்கள் டெலிவரி கூட்டாளர் குழுவில், பெண்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் மேம்படுத்தும் சூழலை உருவாக்க நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். இது போன்ற முன்முயற்சிகள், அதிகமான பெண்கள் கிக் பணியாளர்களில் சேர ஆதரவளிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் எங்கள் முழுமையான அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன. பெண்களின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் முக்கிய கூட்டுமுயற்சிகளை வளர்ப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான பயணத்தில் இது மற்றொரு படியாகும்," - அஞ்சலி ரவி குமார் அவர்கள், தலைமை நிலைத்தன்மை அதிகாரி, ஸோமேட்டோ

"எங்கள் நீடித்தத்தன்மையான புராடக்டுகள் நாடு முழுவதும் உள்ள அனைத்து மகளிரையும் சென்றடைவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம், மேலும் ஸோமேட்டோ உடனான இந்த கூட்டுமுயற்சி அதற்கு ஒரு சிறந்த தொடக்கமாகும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்." - டாக்டர் கோமதி அவர்கள், நிறுவனர், ஃபெமி9

2024 நவம்பர் நிலவரப்படி, ஸோமேட்டோ 250+ நகரங்களில் 2,500க்கும் மேற்பட்ட பெண் டெலிவரி கூட்டாளர்களைக் கொண்டுள்ளது. அவர்களின் நல்வாழ்வை ஆதரிக்க ஸோமேட்டோ பல முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, அவற்றில் ஒரு விருப்பமாக குர்தாவை அறிமுகப்படுத்துதல், குறுகிய தூர டெலிவரி விருப்பங்களை வழங்குதல், மாதத்திற்கு ஊதியத்துடன் கூடிய இரண்டு ஓய்வு நாட்களை அளித்தல், காப்பீட்டுத் திட்டத்தில் மகப்பேறு காப்பீட்டைச் சேர்த்தல் ஆகியவை அடங்கும்.


கருத்துகள் இல்லை