பிக் பாஸை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ஜீ தமிழின் சரிகமப - இளம் சிட்டுக்கள் இன்னிசை குரலுக்கு கிடைத்த வெற்றி !
பிக் பாஸை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ஜீ தமிழின் சரிகமப - இளம் சிட்டுக்கள் இன்னிசை குரலுக்கு கிடைத்த வெற்றி !
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக தொடர்ந்து விதவிதமான கதைக்களம் கொண்ட சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக மக்களை மகிழ்வித்து வருகிறது ஜீ தமிழ்.
சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நேற்று வெளியான ரேட்டிங் நிலவரப்படி சரிகமப நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை முற்றிலுமாக தகர்த்தெறிந்து அதிக ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்துள்ளது. சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் இளம்சிட்டுக்களின் இன்னிசை குரல்களுக்கு கிடைத்து வெற்றி என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் போட்டியாளர்களுக்கு முதல் துளியும் சுவாரஷ்யமில்லாத டாஸ்க்குகளை கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தங்களது ரியல் குணத்தை வெளியே காட்டாமல் அனைவரும் நல்லவர்கள் போலவே இருந்து வருவது சலிப்பை உண்டாக்கி வருகிறது.
மேலும் என்டர்டைன்ட்மென்ட் என்பதே இல்லாமல் எந்நேரமும் சண்டை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் திட்டி கொள்ளுதல், டாஸ்கின் போது சக போட்டியாளர் என்ற எண்ணம் இல்லாமல் வன்மத்தை கொட்டி வருவது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை குறைத்து வருகிறது.
இந்த சூழலில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி உண்மையான திறமைகளை கொண்ட தரமான சாமானிய போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களின் இனிமையான குரல்வளத்தின் மூலமாக மக்களை மகிழ்வித்து வருகிறது. நடுவர்கள் நல்ல முறையில் போட்டியாளர்களை வழிநடத்தி அவர்களின் திறமைகளை மேலும் மெருகேற்றி வருகின்றனர்.
மேலும் இந்த சரிகமப மேடை அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆரோக்யமான போட்டி களமாக திகழ்ந்து வருவதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக இந்த நிகழ்ச்சி மூலம் போட்டியாளர் தர்ஷினியின் சொந்த ஊரான அம்மனம்பாக்கம் கிராமத்தில் முதல் முறையாக தமிழக அரசால் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட விஷயம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சரிகமப போட்டியாளர்களை நேரில் அழைத்து பாராட்டியது, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசுப்பள்ளி மாணவிகளான யோகஸ்ரீ மற்றும் தர்ஷினியை பாராட்டி சமூக வளையதள பக்கத்தில் பதிவு செய்தது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் பெற்றது.
இப்படி ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கொண்டு வருவது மட்டுமின்றி ஆரம்பம் முதலே தொடர்ந்து நல்ல ரேடிங்கையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை