பல ஆண்டுகளாக கிடப்பிலிருந்த கொண்டங்கி- அகரம் மேம்பாலம் திறப்பு அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைத்தார் !
பல ஆண்டுகளாக கிடப்பிலிருந்த கொண்டங்கி- அகரம் மேம்பாலம் திறப்பு அமைச்சர் தா.மோ அன்பரசன் திறந்து வைத்தார் !
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மேலையூர் ஊராட்சியில் உள்ள கொண்டங்கியில் இருந்து அகரம் வழியாக நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் கொண்டங்கி ஏரி உள்ளது.
இந்த ஏரி மழைக்காலங்களில் நீர் நிரம்புவதால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலையின் வழியாக செல்லும். இதன் காராணமாக கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள சாலை இரண்டாக பிளந்து சேதமடைந்து பொதுமக்கள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற மேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி செந்தில் தேர்தல் வாக்குறுதியில் கொண்டங்கி- அகரம் மேம்பாலம் மற்றும் சாலை அமைத்து தறுவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
தற்போது அவரது பெரும் முயற்ச்சியால் அரசிடம் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மனுக்களை அனுப்பி அரசு கவனத்திற்கு கொண்டு சேர்த்து மேம்பாலம் மற்றும் கொண்டங்கியில் இருந்து நெல்லிக்குப்பம் வரை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மேம்பாலம் மற்றும் சாலை பணிகள் முடிவடைந்து சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் அருன்ராஜ் ஆகொயோர் திறந்து வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஆர்.எல் இதயவர்மன், சட்டமன்றத் உறுப்பினர் எஸ்எஸ் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி செந்தில் குமார் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை