சற்று முன்

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள் ! | குட் பேட் அக்லி திரை விமர்சனம் ! | Samsung to Outpace Industry Growth in AC Segment in India ! | Tata Motors Group global wholesales at 3,66,177 in Q4 FY25 ! | PhysicsWallah (PW) Expands into Tamil Nadu with Three Tech-Enabled Offline Vidyapeeth Centres in Chennai ! | THIS AKSHAYA TRITIYA, MIA BY TANISHQ PRESENTS ‘FIORA’ INSPIRED BY NATURE’S BLOOMS ! | பிரித்திவிராஜின் #NOBODY படத்தின் படப்பிடிப்பு துவங்கியது ! | ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன் ! | தமிழ்நாடு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு சார்பில் குறும்பட வெளியீட்டு விழா ! | New Logitech Report: Early Support Crucial to Retain Women in India’s Tech Workforce and Promote Gender Equality ! | ஐகான் ஸ்டார்'அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லி - சன் பிக்சர்ஸ் - கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா ! | அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தில் பாடல் பாடிய தனுஷ் ! | நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடநூலில் சேர்க்க வேண்டும் - நடிகர் சௌந்தரராஜா கோரிக்கை ! | Birla Opus Paints Redefines Elegance with a New Range of Designer Finishes ! | MISSION: IMPOSSIBLE – THE FINAL RECKONING IS HERE ! | மார்வெல் ஸ்டுடியோஸ் தண்டர்போல்ட்ஸ் டிரெய்லரை வெளியிட்டது ! | Marvel Studios unveils Thunderbolts trailer film set to hit Indian theatres on May 1, a day before US release ! | டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம் ! | இந்தியா திரைப்படமான “பெத்தி” படம் பிரம்மாண்டமாக துவங்கியது! | Hyatt Announces Strategic Growth Plans in India and South West Asia with 21 Deals Signed in 2024, 7 Hotel Openings Expected for 2025 ! | Galaxy Tab S10 FE Series Brings Intelligent Experiences to the Forefront With Premium, Versatile Design ! | டெஸ்ட் திரை விமர்சனம் ! | AINU Chennai Hospital Organizes its 3rd edition of AINU Kidney Run to Promote Kidney Health ! | சிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு சிறுநீரக ஓட்ட நிகழ்வின் 3வது பதிப்பை நடத்திய AINU சென்னை மருத்துவமனை ! | தெலுங்கு மற்றும் தமிழில் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படமான ப்ளட் ரோஸஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது !


அமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற "கேம் சேஞ்சர்" முன் வெளியீட்டு நிகழ்வு !!

அமெரிக்கா டல்லாஸில் நடைபெற்ற "கேம் சேஞ்சர்" முன் வெளியீட்டு நிகழ்வு !! 


குளோபல் ஸ்டார் ராம் சரணின் "கேம் சேஞ்சர்" முன் வெளியீட்டு நிகழ்வு: டல்லாஸில் ஒரு வரலாற்றுக் கொண்டாட்டமாக நடைபெற்றுள்ளது

குளோபல் ஸ்டார் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின்  பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸ் நகரின் கர்டிஸ் கல்வெல் மையத்தில் நடைபெற்றது.  இந்திய திரை வரலாற்றில்  அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்தியத் திரைப்படத்தின் முதல் முன் வெளியீட்டு நிகழ்வு இதுவாகும். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள, மாபெரும் கொண்டாட்டமாக இந்நிகழ்வு நிகழ்ந்தேறியது. 

குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர்கள் தில் ராஜு, சிரிஷ், இசையமைப்பாளர் தமன், நடிகை அஞ்சலி உள்ளிட்ட படத்தின் முக்கிய குழுவினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். குளோபல் ஸ்டார்  ராம் சரணுடன் அடுத்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ள இயக்குநர் சுகுமார் மற்றும் புச்சி பாபு சானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இவ்விழாவில் கலந்து கொண்டனர். இந்த அற்புதமான நிகழ்வை ராஜேஷ் கல்லேபள்ளி ஏற்பாடு செய்திருந்தார்.

டல்லாஸ் ரசிகர்களின் அமோக அன்பு மற்றும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து குளோபல் நட்சத்திரம் ராம் சரண் பேசியதாவது… 

"நாங்கள் இந்தியாவை விட்டுப் போகவே இல்லை என்பது போல் இருக்கிறது. அதனால்தான் டல்லாஸ் இப்போது டல்லாஸ் புரம் என்று அழைக்கப்படுகிறது. நான் ஷங்கர் சாரின் படத்தில் நடித்துள்ளேன் என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவரை ஒரு தெலுங்குப் படத்தை இயக்கச் சொல்ல வேண்டும் என்று நான் நெடுநாட்களாகக் கனவு கண்டேன், ஆனால் அது நடக்குமென நான் நினைக்கவே இல்லை. அவருடன் இணைந்து பணியாற்றிய, இந்த மூன்று வருடமும்  நான் நிறையக் கற்றுக்கொள்ளும் அனுபவமாக ஒரு அழகான பயணமாக அமைந்தது. மேலும், "என்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டில் சச்சின் எப்படிப்பட்டாரோ, அதே போல் தான் இந்திய சினிமாவுக்கு ஷங்கர் சார். அவர்தான் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குநர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நான் தனியாக நடித்து வெளியாகும் முதல் படம், என்பது ஒரு சிறப்பு. அதை தில் ராஜு சாரின் பாணியில் சொல்வதென்றால்.. , "உங்களுக்கு எண்ண வேணுமோ, அது எல்லாமும் இருக்கு.' ராஜு சாருவுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது."  என்றவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இயக்குநர் சுகுமாருக்கு நன்றி தெரிவித்த சரண், புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.


இந்த கொண்டாட்ட நிகழ்வு, தெலுங்கு மாநிலத்தில் இருப்பது  போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக இயக்குநர் சுகுமார் குறிப்பிட்டார். வெளிநாட்டில் வசிக்கும் போது கூட தெலுங்கு சினிமாவுக்கு என்ஆர்ஐ பார்வையாளர்கள் அளிக்கும் மிகப்பெரும் ஆதரவிற்காக அவர் நன்றி தெரிவித்தார். தில் ராஜுவுக்கு என் வாழ்நாளில் நன்றி சொல்ல முடியாது. புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கும் காலகட்டத்தில்,  என் முதல் படமான ஆர்யா படத்தில்  அவர் என்னை நம்பினார். ஷங்கர் சாரிடம் தான் என் முதல் ஃபிலிம்பேர் விருதைப் பெற்றேன். சிரஞ்சீவி ரசிகனாக இருந்த நான். அவர் ஏன் ஷங்கர் சாருடன் பணிபுரியவில்லை என்று எப்போதும் ஆச்சரியப்பட்டேன், ஆனால் அவர் என்னுடன் படம் செய்கிறார் என்று ராம்சரண் பகிர்ந்துகொண்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.   எஸ்.ஜே.சூர்யா சாரை எனக்கு மிகவும் பிடிக்கும் இயக்குநராவதற்கு முன், குஷி  படத்தை எனது ரெஃபரன்ஸ்  படங்களில் ஒன்றாக வைத்திருந்தேன்.  ராம் சரண் பற்றி சுகுமார் மேலும் கூறுகையில், "சரண் எனது சகோதரர் போன்றவர், அவருடன் பணியாற்றுவது எப்போதுமே மகிழ்ச்சி தான். சிரஞ்சீவி சாருடன் படத்தைப் பார்த்தேன், அதனால் நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்: முதல் பாதி - அருமை, இடைவெளி - பிளாக்பஸ்டர் மற்றும் பிளாஷ்பேக் எபிசோட் அட்டகாசம். ஷங்கர் சாரின் ஜென்டில்மேன் மற்றும் பாரதியுடு போன்ற படங்களுக்குப் பிறகு, சரணின் இந்த படத்தை மிகவும் ரசித்தேன். ரங்கஸ்தலம் படத்திற்காகத் தேசிய விருதை வென்றார், ஆனால் இந்த படத்தின் கிளைமாக்ஸைப் பார்த்த பிறகு, இந்த முறை அவர் கண்டிப்பாக மீண்டும் வெல்வார் என்று நான் நம்புகிறேன்."


தயாரிப்பாளர் தில் ராஜு, தனது 50 வது படத்தை ராம் சரண் மற்றும் ஷங்கர் போன்ற பிரமாண்டங்களுடன் இவ்வளவு பெரிய அளவில் தயாரிப்பது குறித்து, தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். ஷங்கர் சாருடன் எனது பயணம் 1999 ஆம் ஆண்டு ஓகே ஒக்கடு படத்தின் மூலம் தொடங்கியது. அந்த படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போது அவரை முதன்முதலில் சந்தித்தேன். பின்னர் அவர் தனது தயாரிப்பான ஈரம் படத்தைத் தெலுங்கில் வைஷாலியாக வெளியிட என்னை நம்பினார். இப்போது அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது முதல் நேரடியான தெலுங்குப் படமான கேம் சேஞ்சரைத் தயாரிக்க, என்னை நம்பி, எங்கள் பேனரின் இணை இயக்குநர் மூலம், ஷங்கர் எங்களின் கீழ் ஒரு தெலுங்குப் படத்தைத் தயாரிக்க விரும்புவதாகத் தெரிந்துகொண்டேன். அந்த நேரத்தில் ராம் சரண் படப்பிடிப்பிலிருந்தபோது, ஷங்கர் சாரின் ஐடியாவைப் பற்றிச் சொன்னேன். இப்படித்தான் எங்களின் இந்த பிரம்மாண்ட படைப்பு துவங்கியது. COVID-19 காரணமாகத் தயாரிப்பு தாமதமானது, ஆனால் இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில், பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளோம்.  நான் மொபைலில் இப்படத்தின் 'Dhop' பாடலைப் பார்த்தேன், என் கண்களில் கண்ணீர் சுரந்தது. உங்கள் அனைவரையும் இப்படம் மகிழ்விக்கும்.

ராம் சரண் உடனான உறவு குறித்து தில் ராஜு கூறுகையில், "சரண் என்றாலே எனக்கு கல்யாண் சாருதான் நினைவுக்கு வருகிறார். தோலி பிரேமா, குஷி, கப்பர் சிங் போன்ற படங்களை விநியோகித்ததிலிருந்து மெகாஸ்டார் குடும்பத்துடனான எனது பயணம் தொடங்கியது. நான் முன்பு  சங்கராந்தியின் போது வெளியான சரணின், எவடு படத்தைத் தயாரித்தேன். இப்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திரைப்படம் நம் தெலுங்கு மாநிலங்களின் தற்போதைய நிகழ்வுகளைக் காட்டுகிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு ஷங்கர் சார் துவங்கிய  கேம் சேஞ்சர் திரைப்படம் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு கேம் சேஞ்சராக இருக்கும்.

"பாடல் வேணுமா பாட்டு இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, சங்கராந்திகி ஹிட் வேணுமா, ஹிட் இருக்கு" என்று தில் ராஜு தனது டிரேட்மார்க் வைரல் டயலாக் மூலம் மக்களை மகிழ்வித்தார். இந்த நிகழ்வை இவ்வளவு பெரிய அளவில் ஏற்பாடு செய்து மாபெரும் வெற்றியடைய செய்த ராஜேஷ் கல்லேபள்ளிக்கு நன்றி தெரிவித்தார். "


கருத்துகள் இல்லை