ஏர் இந்தியா, விமானத்தில் பறக்கையில் பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு சேவையான 'விஸ்டா ஸ்ட்ரீம்'மை அகலம் குறைந்த விமானங்களுக்கும் விரிவுபடுத்துகிறது !
ஏர் இந்தியா, விமானத்தில் பறக்கையில் பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு சேவையான 'விஸ்டா ஸ்ட்ரீம்'மை அகலம் குறைந்த விமானங்களுக்கும் விரிவுபடுத்துகிறது !
சென்னை, 11 டிசம்பர் 2024: இந்தியாவின் முன்னணி உலகளாவிய விமான நிறுவனமான ஏர் இந்தியா [Air India], விமானத்தில் பறக்கும் போது நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் பொழுதுபோக்கு சேவையான [wireless inflight entertainment service] விஸ்டா ஸ்ட்ரீம் [Vista Stream]-ஐ தனது அகலம் குறைந்த குறுகிய உடற்பகுதி கொண்ட விமானங்களுக்கும் [narrowbody fleet] வழங்குகிறது. இதன் மூலம் தனது விருந்தினர்கள் பயணிக்கும் போதே தங்கு தடையில்லாமல் நிகழ்ச்சிகளைக் கண்டு கழிக்கும் பொழுதுபோக்கு அம்சத்தை மேம்படுத்தி இருக்கிறது.
ஆகஸ்ட் 2024 -ல் அறிமுகம் செய்யப்பட்ட ’விஸ்டா ஸ்ட்ரீம்’, ஏர் இந்தியாவின் அகலமான உடற்பகுதியைக் [சமீபத்தில் விமான சேவையில் இணைக்கப்பட்டிருக்கும் போயிங் 777 மற்றும் ஏர்பஸ் 350 விமானங்களைத் தவிர்த்து] விமானங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சேவையை குறுகிய உடற்பகுதி கொண்ட விமானங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், விஸ்டா ஸ்ட்ரீம் சேவையை இப்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு நெட்வொர்க்கில் அகலமான மற்றும் குறுகிய உடற்பகுதியைக் கொண்ட விமானங்களில் விருந்தினர்கள் கண்டுகளிக்கமுடியும்.
விஸ்டா ஸ்ட்ரீம்மை, ஏர் இந்தியாவின் விருந்தினர்கள் தங்களது தனிப்பட்ட ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் பல்வேறு வகைகளிலான நிகழ்ச்சிகள் மற்றும் கலைப் படைப்புகளை நேரடியாக ஸ்ட்ரீம் செய்ய உதவுகிறது. இதன் மூலம் விருந்தினர்கள் எந்தவிதமான தடைகளும் இல்லாத, ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை கொண்டாட உதவுகிறது.
“ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனமாக நாங்கள் தொடர்ந்து மாற்றியமைத்து மேம்படுத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, எங்கள் விருந்தினர்கள் ஏர் இந்தியாவின் விமானத்தில் பயணிக்கும் போது அவர்களின் தனிப்பட்ட மின்னணு சாதனங்களில் டிஜிட்டல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க உதவும் ’விஸ்டா ஸ்ட்ரீமை’ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் குறுகிய உடற்பகுதி கொண்ட விமான அணிவகுப்பு முழுவதும், விஸ்டா ஸ்ட்ரீம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், தடையில்லா பொழுதுபோக்கு (BYOD) சேவையானது உள்நாட்டு மற்றும் சர்வதேச நெட்வொர்க் முழுவதும் கிடைக்கும்,” என்று ஏர் இந்தியாவின் தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி திரு. ராஜேஷ் டோக்ரா [Rajesh Dogra, Chief Customer Experience Officer, Air India.] கூறினார்.
பாலிவுட் பிளாக்பஸ்டர்கள் மற்றும் ஹாலிவுட் ஹிட்கள் முதல் கவனத்தை ஈர்க்கும் ஆவணப்படங்கள், கிளாசிக் டியூன்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என 1600+ மணிநேர ப்ரீமியம் படைப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை விருந்தினர்கள் கண்டு ரசிக்கலாம். இவை மட்டுமில்லாமல் விஸ்டா ஸ்ட்ரீம் நிகழ்நேர விமான கண்காணிப்புக்கான நேரடி வரைபடத்தையும் கொண்டுள்ளத. இந்த வசதியை விருந்தினர்கள் தங்களது விண்டோஸ், அண்ட்ராய்ட் ஐஒஎஸ் மற்றும் மேக்ஒஎஸ் இயங்குதளங்களிலான [iOS, Android, Windows மற்றும் macOS] சாதனங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனால் விமானப் பயணம் முழுவதிலும் அனைவருக்கும் பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகளை எளிதாக்குவதோடு, அவற்றை கண்டுகளிக்கவும் உதவுகிறது.
கருத்துகள் இல்லை