சற்று முன்



கூலித் தொழிலாளியின் மகன் டாக்டர். அசோக் குமார் சுந்தரமூர்த்தி, அரசுப் பள்ளியில் படித்து இன்று உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் !

கூலித் தொழிலாளியின் மகன் டாக்டர். அசோக் குமார் சுந்தரமூர்த்தி, அரசுப் பள்ளியில் படித்து இன்று உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். !

கோரை பாய் விற்கும் அன்றாட கூலி தொழிலாளியின் மகன் to உலகின் சிறந்த விஞ்ஞானி..... கல்வியால் நடந்த சாதனை! அமெரிக்காவில் உள்ள ஸ்டேன் போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் (2024) அசோக் குமார் சுந்தரமூர்த்தி பெயர் இரண்டாவது முறையாக இடம் பெற்றிருக்கிறது. 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் ரோட்டாண்டி குப்பம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த இவர் தினமும் பாய் விற்கும் கூலி தொழிலாளியின் மகன். இவர் முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றவர். கடலூரில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை வேதியியல் துறையில்  பட்டம் பெற்ற இவரின் பரம்பரையில் முதல் பட்டதாரி ஆவர். தஞ்சாவூரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பகுப்பாய்வு வேதியியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார்.

பின்னர் கல்வி அமைச்சகம் வழங்கிய தைவான் பெல்லோஷிப் மூலம் தைவானில் பிஎச்டி படிக்கச்சென்றார். பல ஆய்வுக் கட்டுரைகளுடன் வேதியியல் பொறியியலில் முதல் வகுப்பில் பிஎச்டி முடித்துள்ளார். இன்று சென்னையில் உள்ள சவிதா பல்கலைக்கழகத்தில் நேனோபயோசென்சர் மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் இந்திய அரசாங்கத்திடம் இருந்து மனித வியர்வையில் போதைப்பொருள் கண்காணிப்புக்கான வெரபிள் பயோசென்சர்களை உருவாக்குவதற்கான மானியத்தைப் பெற்றுள்ளார். அவர் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சுகாதாரப் பாதுகாப்புப் பயன்பாடுகளுக்கான உயிரி உணரிகளின் வளர்ச்சி குறித்து வெளியிட்டுள்ளார்.

அரசு பள்ளியில் கல்வியை தொடங்கிய அசோக்குமார் சுந்தரமூர்த்தி 2023-2024 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விஞ்ஞானிகளின் ஒருவராக உயர்ந்து நிற்கிறார். 

பேராசிரியர் அசோக்குமார் சுந்தரமூர்த்தி குறித்து தெரிவித்த அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இவரின் தாய்: அமிர்த வள்ளி தந்தை: சுந்தரமூர்த்தி இருவருமே பாய் நெய்து, பாய் விற்று வருபவர்கள் அதில் வரும் சொற்ப பணத்தில் தன் குழந்தைகளை படிப்பில் உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் உழைத்தார்கள். அமெரிக்காவில் உள்ள ஸ்டேன் போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் அசோக்குமாரின் பெயர் இரண்டாவது முறையாக இடம் பெற்று இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

இந்த சாதனை குறித்து தெரிவித்த ஆய்வாளர் அசோக்குமார் சுந்தரமூர்த்தி எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் தமிழக கல்வி முறைக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மாணவர்கள் அதிக உத்வேகத்துடனும், கடின உழைப்புடனும் படித்தால், எதையும் சாதிக்கலாம், இதற்கு என் வாழ்க்கையே உதாரணம், அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை