சற்று முன்



கிராவன் தி ஹண்டர்' ஏன் 'ஆர்' என மதிப்பிடப்பட்டது என்பது குறித்து ஜே.சி. சன்டோர் !

கிராவனின் பயணத்தின் கதையை நேர்மையாகச் சொல்ல இதுவே ஒரே வழி." - 'கிராவன் தி ஹண்டர்' ஏன் 'ஆர்' என மதிப்பிடப்பட்டது என்பது குறித்து ஜே.சி. சன்டோர் !

மிகவும் எதிர்பார்க்கப்படும் ’கிராவன் தி ஹண்டர்’ இன்னும் 2 வாரங்களுக்குள் அதாவது 2025 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சோனியின் சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்றான ஸ்பைடர் மேனின் மிகவும் அச்சுறுத்தும் எதிரிகளில் ஒருவரான கிராவனுடன், ’ஆர்’ ரேட்டட் ஆக்ஷன்-பேக் என்டர்டெய்னர் படமாக வெளியாகிறது. 

படத்திற்கு ‘ஆர்’ ரேட்டட் சரியானது என்றும் இதன் மூலம் கிராவனைப் பற்றி இன்னும் சரியான வழியில் கதை சொல்ல முடிந்தது என்றும் இயக்குநர் ஜே.சி. சன்டோர் தெரிவித்துள்ளார். 

கிராவனின் கதையை அழுத்தமான, நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என்பதற்காக சன்டோர் எந்த சமரசமும் இல்லாமல் படமாக்கியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பது, "கிராவனின் தோற்றத்தையும் கதையையும் உண்மையாக காட்டுவதற்கு இந்த ‘ஆர்’ சான்றிதழ் பெரிதும் உதவியது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் கோபத்தால் ஆன குழந்தை செர்ஜி, ஒரு இளைஞனாக இரண்டு பேரை கொன்ற சோகமான தருணத்தை நீங்கள் பார்ப்பீர்கள். அவர் அந்த சம்பவத்திலிருந்து விலகிச் சென்றிருக்கலாம். ஆனால், அதையும் மீறி எப்படி நடந்தது என்பதுதான் கதை. அதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. 'இவர்கள் கெட்டவர்கள், நான் அவர்களை இங்கிருந்து அனுப்பி விட்டேன். அது நன்றாக இருக்கிறது’ என்ற இந்தக் கட்டுப்பாடற்ற கோபம்தான் இந்தக் கதையின் மையம்” என்றார். 

’கிராவன் தி ஹன்டர்’ மார்வெலின் மிகச் சிறந்த வில்லன்களில் ஒருவர். அவர் எப்படி உருவானார் என்ற கதையை தனியாக முழுக்க ஆக்‌ஷனுடன் ’ஆர்’ ரேட்டட் கதையாக இது உருவாகியுள்ளது. ஆரோன் டெய்லர்-ஜான்சன் தனது இரக்கமற்ற கேங்க்ஸ்டர் தந்தையான நிகோலாய் க்ராவினோஃப் (ரஸ்ஸல் குரோவ்) உடனான சிக்கலான உறவைக் கொண்ட கிராவெனாக நடித்துள்ளார்.

ஜே.சி. சன்டோர் படத்தை இயக்கியிருக்க, இப்படத்தில் அரியானா டிபோஸ், ஃப்ரெட் ஹெச்சிங்கர், அலெஸாண்ட்ரோ நிவோலா, கிறிஸ்டோபர் அபோட் மற்றும் ரஸ்ஸல் க்ரோவ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஜனவரி 1 ஆம் தேதி ‘க்ரேவன் தி ஹண்டர்’ படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுகிறது.


கருத்துகள் இல்லை