திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் ஜீ தமிழ் எடுக்கும் புது முயற்சி.. குவியும் மக்களின் பாராட்டு !
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் ஜீ தமிழ் எடுக்கும் புது முயற்சி.. குவியும் மக்களின் பாராட்டு !
தமிழகத்தின் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது திருவண்ணாமலை. ஒவ்வொரு ஆண்டும் இங்கு கார்த்திகை கிருத்திகை தினத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த வருடம் டிசம்பர் 13-ம் தேதி திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
ஜீ தமிழும் எப்போதும் தமிழ் மக்களின் கலாச்சாரங்களுடன் இணைந்த ஒன்றாக இருந்து வருகிறது, இந்த தருணத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் இந்த பாரம்பரிய கொண்டாட்டத்தில் பங்களிப்பின் ஒரு பகுதியாக ஜீ தமிழ், கிரிவலப்பாதையில் மக்களின் பாதுகாப்பிற்காக தடுப்புகளை ( பேரிகார்ட் ) நிறுவ உள்ளது, இது மக்கள் சுமூகமான முறையில் கிரிவலம் சுற்றி வர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரிகார்ட் மூலமாக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ஜீ தமிழ் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு கார்த்திகை தீப பிரசாத கிட்டுகளை வழங்க உள்ளது. இந்த பிரசாத பாக்கெட்களில் பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட இரண்டு மண் அகல் விளக்குகளும் அடங்கும், இது ஒளி மற்றும் நேர்மறையை குறிக்கிறது. இந்த பிரசாத பாக்கெட்கள் திருக்கார்த்திகை தீபத்திற்கு முந்தைய நாளே பக்தர்களுக்கு அளிக்கப்பட இருப்பதால் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இந்த அகல் விளக்குகளை பயன்படுத்தி தீபம் ஏற்றி இறைவனின் அருளை பெறுவார்கள் என ஜீ தமிழ் நம்புகிறது.
பொழுதுபோக்கிற்கு அப்பாற்பட்டு, கார்த்திகை தீப திருநாளின் போது ஜீ தமிழ் எடுக்கும் இந்த முயற்சிகள் தமிழ் கலாச்சார உணர்வை மேலும் மேம்படுத்த உதவும் எனவும் இந்த முயற்சி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் உணர்வுகளோடு ஒன்று சேர்ந்து நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பேணி காக்க வேண்டும் என்பதே ஜீ தமிழின் நோக்கம், அதற்காகவே இந்த முயற்சியினை கையில் எடுத்ததாக சேனல் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை