சற்று முன்



டாடா மோட்டார்ஸ் அதன் அதிநவீன தொழில்நுட்பத்தை Bauma Conexpo 2024 இல் வெளியிட்டுள்ளது !


டாடா மோட்டார்ஸ் அதன் அதிநவீன தொழில்நுட்பத்தை Bauma Conexpo 2024 இல் வெளியிட்டுள்ளது !

பல்வேறு தொழில்களுக்கான புதிய வயது ஜென்செட்டுகள், தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் ஆக்சில்கள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகிறது

இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளரும் மொபிலிட்டி தீர்வுகள் வழங்குநருமான டாடா மோட்டார்ஸ், Bauma Conexpo 2024 இல் அதன் விரிவான அளவிலான மேம்பட்ட தொகுப்புகளை காட்சிப்படுத்தியது. அதன் காட்சிப்படுத்தல்களில், 25kVA முதல் 125kVA வரையிலான ஆற்றல் வரம்புள்ள CPCB IV+ இணக்கமான டாடா மோட்டார்ஸ் ஜென்செட்கள், 55-138hp பவர் நோட்கள் உள்ளடங்கிய CEV BS V உமிழ்விற்கு-இணக்கமான தொழில்துறை இயந்திரங்கள், லைவ் ஆக்சில்கள் மற்றும் டிரெய்லர் ஆக்சில்கள் மற்றும் பாகங்கள் ஆகியவை அடங்கும். இத்தீர்வுகள் பொருள் கையாளுதல், கட்டுமான உபகரணங்கள், தொழில்துறை பயன்பாடுகள் மற்றும் தளவாடப் பிரிவுகளின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அதிக செயல்திறன் மற்றும் நீடித்த தன்மைக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Bauma Conexpo 2024 இல் டாடா மோட்டார்ஸ் பெவிலியனைத் திறந்து வைத்த, டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்கள் பிரிவின், உதிரிபாகங்கள் மற்றும் வாகனம் அல்லாத வணிகத்தின், தலைவர் திரு. விக்ரம் அகர்வால் அவர்கள், "Bauma Conexpo வலுவான மற்றும் நம்பகமான தொழில்நுட்பங்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் ஆக்ரிகேட்களை அறிமுகப்படுத்துவதற்கு சரியான தளமாகும். இந்த புதிய தொகுப்புகள் எங்கள் வாடிக்கையாளர்களின் நேரடிக் குரலாகும். அவை, விரிவான வாடிக்கையாளர் கருத்து மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் எங்கள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துகிறோம் - ஜென்செட்டுகளுடன் மின் தீர்வுகளை வழங்குதல், CEV BS V உமிழ்வு-இணக்கமான தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் லைவ் ஆக்சில்களுடன் உள்கட்டமைப்பை செயல்படுத்துதல் மற்றும் டிரெய்லர் ஆக்சில்கள் மற்றும் கூறுகளுடன் தளவாடங்களை வலுப்படுத்துகிறோம்” என்று கூறினார்.

டாடா மோட்டார்ஸ் அக்ரிகேட்ஸ் அவற்றின் அதிக ஆயுள், செயல்திறன் மற்றும் செயல்பாடு ஆகியவற்றால் வேறுபடுகின்றன. விரிவான ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்டது மற்றும் அதிநவீன வசதிகளில் தயாரிக்கப்பட்ட இந்த தீர்வுகள் நாடு முழுவதும் உள்ள 2500 அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களால் ஆதரிக்கப்படுகின்றன. கடுமையான தொழில்துறை விவரக்குறிப்புகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான, உயர்-செயல்திறன் தொகுப்புகளை வழங்குவதன் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஆதரிப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. 


கருத்துகள் இல்லை