சற்று முன்

AINU Chennai Hospital Organizes its 3rd edition of AINU Kidney Run to Promote Kidney Health ! | சிறுநீரக ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு சிறுநீரக ஓட்ட நிகழ்வின் 3வது பதிப்பை நடத்திய AINU சென்னை மருத்துவமனை ! | தெலுங்கு மற்றும் தமிழில் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படமான ப்ளட் ரோஸஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது ! | ஜோயாலுக்காஸ் அறிமுகப்படுத்தும் கிருஷ்ண லீலா கலெக்ஷன் ! | EMI திரை விமர்சனம் ! | கேத்தரின் தெரசா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் "பனி" மே மாதம் உலகெங்கும் வெளியாகிறது ! | “S/o காலிங்கராயன் திரை விமர்சனம் ! | ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு ! | சத்யராஜ் - காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் டைட்டில் & டைட்டில் லுக் வெளியீடு ! | Kanimozhi Karunanidhi Stands Up for Equity, Language Rights, and Federalism ! | தரைப்படை திரை விமர்சனம் ! | From Zero to Hero: A Journey Inspired by the University of Madras, Guindy Campus ! | ரசிகர்கள் பேராதரவோடு 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர் ! ' | விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு ! | Motan Expanded in India to Support Growing Plastics Industry Demands ! | Kauvery Hospital Vadapalani Successfully Performs Paediatric Liver Transplant on a 4-Month-Old Infant ! | வடபழனி காவேரி மருத்துவமனையில் 4 மாத பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகர கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை ! | Samsung Introduces SmartThings Powered ‘Customized Cooling’ for Bespoke AI ! | Samsung’s New Bespoke AI Laundry With AI Home Enables Smarter, More Efficient Laundry Care ! | ஏப்ரல் 4 ம் தேதி முதல் தரைப்படை ! | சாம்சங்கின் மிகவும் மலிவு விலை AI-இயங்கும் ஸ்மார்ட்போனான கேலக்சி A26 5G, இந்தியாவில் வெறும் 22999 ரூபாயில் தொடங்குகிறது ! | Tata Motors registered total sales of 252,642 units in Q4 FY25 ! | Samsung To Launch Bespoke AI Jet Ultra, the Most Powerful Cordless Stick Vacuum Cleaner in the World ! | Samsung Electronics Unveils ‘AI Home’ Vision at Welcome to Bespoke AI Event ! | முன்னணி நடிகர் தனுஷ் "DCutz By Dev" சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் திறந்து வைத்தார் !


மிஆ பை தனிஷ்க்,அசத்தல் ஸ்டைலுடன் ரன்வே ஸ்டார் நிகழ்ச்சியையும், 4 புதிய விற்பனை நிலையங்களின் தொடக்கத்தையும் கொண்டாடுகிறது !


மிஆ பை தனிஷ்க், சென்னை வாடிக்கையாளர்களுக்காக அசத்தல் ஸ்டைலுடன் ரன்வே ஸ்டார் நிகழ்ச்சியையும், 4 புதிய விற்பனை நிலையங்களின் தொடக்கத்தையும் கொண்டாடுகிறது !


சென்னை, இந்தியாவின் முன்னணி உயர்தர ஜூவல்லரி பிராண்டுகளில் ஒன்றான மிஆ பை தனிஷ்க், சமீபத்தில் சென்னையில் மிக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தனது தனித்துவமான ரன்வே ஸ்டார் நிகழ்வை [Runway Star Event] வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. பிரத்தியேக மாலை நேரமானது விசுவாசமிக்க மிஆ வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்ததோடு, இம்மாநகரத்தின் உற்சாகமிக்க வாடிக்கையாளர்கள் மீது மிஆ கொண்டிருக்கும் அக்கறையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும்விதமாக அமைந்திருந்தது. இந்நிகழ்வு வாடிக்கையாளர்களின் தனித்துவமிக்க ஆளுமை, நம்பிக்கை மற்றும் பாணியைக் கொண்டாட வழி வகுக்கும் வகையில் வாடிக்கையாளர்களை மேடையில் ஏற்றி, மிஆ ஆபரணங்களால் அலங்கரிக்க செய்து, வசீகரமாக ரன்வேயில் நடக்க செய்து அழகுப் பார்த்தது. இது நவீன யுகத்தைச் சேர்ந்த மிஆ பெண்ணின் ஆத்மார்த்தமான ஆளுமையை வெளிப்படுத்திய நிகழ்வாக சிறப்புற செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ரசனைமிக்க நிகழ்வோடு சேர்ந்த ஒன்றாக, மிஆ சென்னையில் தனது விற்பனை செயல்பாடுகளை விரிவுபடுத்தும் விதமாக புதிய விற்பனை நிலையங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி வளசரவாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் ஏரோஹப் ஆகிய இடங்களில் நான்கு புதிய பிரத்தியேக விற்பனை நிலையங்களை கீழ்கண்ட முகவரிகளில் அறிமுகப்படுத்துகிறது.



மிஆ பை தனிஷ்க், எண்:151-6, ஆற்காடு சாலை, பிருந்தாவன் நகர், வளசரவாக்கம், சென்னை – 600 087. [Mia by Tanishq, No:151-6, Arcot Road, Brindavan Nagar, Valasaravakkam, Chennai – 600 087]

மிஆ பை தனிஷ்க், No:6, பாண்டியன் நகர், வெட்டுவாங்கேணி, கிழக்கு கடற்கரை சாலை, வெட்டுவான் அருகில், சென்னை – 600 041. [Mia by Tanishq, No:6,Pandian Nagar, Vettuvangeni, East Coast Road, Near Vettuvan, Chennai – 600 041]

மிஆ பை தனிஷ்க், 4/668, மேற்கு பாரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா அவென்யூ, துரைப்பாக்கம், பழைய மகாபலிபுரம் சாலை, சென்னை - 600 097. [Mia by Tanishq, 4/668, West Pari, Sri Venkateswara Avenue, Thoraipakkam, OMR, Chennai - 600 097]

மிஆ பை தனிஷ்க், எண் A9, தரை தளம், ஏரோ ஹப் மால், மீனம்பாக்கம், சென்னை – 600 027. [Mia By Tanishq, No A9, Ground floor, Aero Hub Mall, Meenambakkam, Chennai – 600 027]

இந்த புதிய விற்பனை நிலையங்கள் மிகப்பிரம்மாண்டமாக 4300 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன. இங்கு வாடிக்கையாளர்கள் பழைய தங்க நகைகளை எந்தவிதமான தடைகளும் இல்லாமல் எளிதில் பரிமாறிக்கொள்வதற்கும், புதிய ஆபரணங்களாக மேம்படுத்துவதற்கும் உதவும் நோக்கத்துடன் காரட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மிஆ சென்னை வாடிக்கையாளர்களுக்காக, அவர்கள் அன்றாடம் அணியும் ஆபரணங்கள் சர்வதேச போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையிலும், நவீன பாணி அதனுடன் அழகுற கலந்திருக்கும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதில் மிஆ கொண்டிருக்கும் அக்கறையையும், அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டும் வகையில் மிஆ வழங்கும் ஆபரணங்கள் அமைந்திருக்கின்றன.
புதிய விற்பனை நிலையங்களின் தொடக்க விழாவில் தெற்கு-1 பிராந்தியத்தின் சர்க்கிள் பிஸினெஸ் ஹெட் திரு. நரசிம்மன். ஒய்.எல். [Mr. Narasimhan YL, Circle Business Head - South 1] தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் அவர் மிஆ பை தனிஷ்க் வழங்கும் அன்றாட ஆபரணங்களில் சர்வதேச பாணிகளின் வடிவமைப்பும், தரமும் இருப்பதற்காக மிஆ காட்டி வரும் அக்கறையைப் பற்றி எடுத்துரைத்தார்.
ரன்வே ஸ்டார் நிகழ்வு மற்றும் நான்கு புதிய விற்பனை நிலையங்கள் அறிமுகம் குறித்து பேசிய தனிஷ்க் பை மிஆ-வின் சில்லறை வர்த்தகப் பிரிவு தலைவர் திரு. சஞ்சய் பட்டாச்சார்ஜி [Mr. Sanjay Bhattacharjee, Head of Retail, Mia by Tanishq] மற்றும் தெற்கு-1 பிராந்தியத்தின் சர்க்கிள் பிஸினெஸ் ஹெட் திரு. நரசிம்மன். ஒய்.எல். [Mr. Narasimhan YL, Circle Business Head - South 1] ஆகிய வரும் கூட்டாக கூறுகையில், “மிஆ பை தனிஷ்க்கிற்கு மிக முக்கியமான நகரம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் சென்னையில், மிஆ ரன்வே ஸ்டார் நிகழ்வை இங்கு நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியிலும், எங்களது வாடிக்கையாளர்களை மையமாக கொண்டே மேற்கொண்டு வருகிறோம். மேலும் இந்த உற்சாகமான நிகழ்வு மற்றும் எங்களது புதிய விற்பனை நிலையங்களின் அறிமுகம், நவீன தமிழ் பெண்களுக்கு நவநாகரீக நகைகளை இன்னும் எளிதாக கிடைக்க செய்ய வேண்டுமென்பதிலும், மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவதிலும் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எங்கள் வாடிக்கையாளர்கள் மிஆவின் வடிவமைப்புகளை ரன்வே ஸ்டார் நிகழ்வில் நம்பிக்கையுடன் காட்சிப்படுத்துவதைப் பார்த்த பொழுது, அவர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் வலுவான உறவுக்கு சான்றாக அமைந்திருப்பதை உணர முடிகிறது. இப்போது, சென்னை நகரத்தில் 14 பிரத்தியேக விற்பனை நிலையங்களுடன், இம்மாநகரின் உற்சாகமிகுந்த, விவேகமான வாடிக்கையாளர்களுடன் எங்கள் உறவை மேலும் ஆழப்படுத்துவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். சென்னையில் இருக்கும் எங்களது வாடிக்கையாளர்கள் சமகால பாணியில் ஆர்வமுள்ளவர்கள். மேலும், நவீன நேர்த்தியுடன் கலாச்சார பாரம்பரியத்தை அழகுடன் ஒன்றிணைக்கும் நகைகளைப் பாராட்டுகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அவர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆபரணங்களை வடிவமைத்து வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.’’ என்றார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள விற்பனை நிலையங்களில் மிஆ-வின் சமீபத்திய பண்டிகை நகைத்தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் சிலிர்ப்பூட்டும் 'மிஆ டிஸ்கோ' நகைத்தொகுப்பும் [Mia Disco Collection] அடங்கும், இந்த நகைத்தொகுப்பு, 1970-களின் பாணியான டிஸ்கோ காலத்தின் வண்ணமிகு கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்களுக்கேற்ற வகையில் மாற்றியமைத்து கொள்ள உதவும் வடிவமைப்புகளுடன், இந்நகைத்தொகுப்பு வாடிக்கையாளர்கள் பல தோற்றங்களில் வசீகரிக்கும் வாய்ப்புகளையும் வழங்குகிறது. இதனால் பெரிதாக கவனத்தை ஈர்க்காத நேர்த்தியை, மற்றவர்களை திரும்பிப் பார்க்க செய்யும் வசீகரத்தையும், அழகையும் எளிதில் பெற உதவுகிறது. இவற்றுடன் வாடிக்கையாளர்கள் 14 காரட் மற்றும் 18 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட மெல்லிய எடையிலான, சமகால வடிவமைப்புகளில் இருக்கும் ஆபரணங்களையும் தேர்ந்தெடுக்க முடியும். இது, அன்றாடம் அணிவதற்கு உகந்த ஆபரணங்களுடன், ஸ்டைலை அழகுற கலந்திருப்பது மிஆ-வின் நோக்கத்தை எடுத்து காட்டுகிறது. இவை மட்டுமில்லாமல் இதய வடிவத்தில் அறிமுகமாகி இருக்கும் லவ்ஸ்ட்ரக் [Lovestruck] சாலிடர்கள், நவநாகரீகமான 'ஐ - ஐ' [Eye-eye] வடிவமைப்புகள் மற்றும் காதணிகள், பதக்கங்கள், நெக்லஸ்கள், வளையல்கள், வளையல்கள், மோதிரங்கள், மங்களசூத்திர ஆபரணங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளிலான ஆபரணங்களும் இங்கு விற்பனைக்கு உள்ளன.
செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் நவீன அழகியல்களின் தனித்துவமான கலவையுடன் தனித்துவமிக்க நகரமாக திகழும் சென்னை, தனிஷ்க் பை மிஆ -விற்கு தவிர்க்கவே முடியாத விற்பனை செயல்பாட்டு சந்தையாக இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகரமாக அறியப்படும் சென்னை, கலை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆழமான வேரூன்றிய மரபுகளுக்காக இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்த உணர்வு, அதன் துடிப்பான, பரபரப்பான நகர்ப்புற வாழ்க்கை முறையுடன் எந்தவித தடையின்றி இணைந்திருக்கிறது. இந்நகரத்தின் காஸ்மோபாலிட்டன் வாடிக்கையாளர்கள், குறிப்பாக ஜென் – இசட் தலைமுறையினர் மற்றும் மில்லியனில்களைக் கொண்ட பெரும் மக்கள் தொகையானது, தனித்துவம் மற்றும் கலாச்சார பெருமை இரண்டையும் பிரதிபலிக்கும் சமகால மற்றும் மெல்லிய எடையிலான நகைகளை அதிகம் விரும்புகின்றனர். மிஆ-வின் நேர்த்தியான வடிவமைப்புகள், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு ஏற்றதாகவும் ரசனையுடன் இருப்பதாலும், தினம் தினம் அதிகரித்து வரும் சென்னையின் விருப்பங்களை பூர்த்தி செய்கின்றன. இது இப்பிராந்தியத்தில் மிஆ பை தனிஷ்க் ப்ராண்டின் வளர்ச்சிக்கான முக்கிய நகரமாக முக்கியத்துவம் பெற வைட்த்திருக்கிறது.


கருத்துகள் இல்லை