சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்கான 25 வது அப்போலோ டயாலிசிஸ் கிளிக் கிளையை தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திறந்துள்ளது !
சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்கான 25 வது அப்போலோ டயாலிசிஸ் கிளிக் கிளையை தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திறந்துள்ளது !
திருவண்ணாமலை : தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சூரியன் மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் பிரிவை அப்போலோ டயாலிசிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், அப்போலோ ஹெல்த் & லைப் ஸ்டைல் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமும், டயாலிசிஸ் சேவைகளில் முன்னோடியுமான இந்நிறுவனம் திறந்து உள்ளது. இந்த புதிய டயாலிசிஸ் நிறுவனத்தின் மூலம் சிறுநீரக செயலிழப்பை எதிர்கொண்டுள்ள நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளையும், உரிய பராமரிப்புகளையும் வழங்கும் வகையில் அதிநவீன, வசதி பொருத்தப்பட்டுள்ளது தொழில்நுட்பத்துடன் தொடங்கப்பட்டுள்ள மருத்துவமனை வளாகத்தில், அனுபவம் வாய்ந்த சிறுநீரக மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் செயல்பட உள்ளது.,
உலகளவில் டயாலிசிஸ் கிளினிக் உலகத்தரம் வாய்ந்த சேவைகளில் வழங்கும் முதன்மையான மருத்துவமனைகளில் அப்போலோ மருத்துவமனை விளங்கி வருகிறது.. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நோயாளிகள் கனிவோடு கவனிக்கப்படுகின்றனர். அனுபவமும், திறமையும் மிக்க சிறுநீரக மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் அர்ப்பணிப்பு குழு, சுகாதாரமான சுற்றுப்புற சூழல் வசதி மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட சூழலில் நிபுணத்துவம் கண்ட மருத்துவர்களும் தொழில்நுட்ப பணியாளர்களும் இங்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். டயாலிசிஸ் சிகிச்சைக்கான CMCHIS (முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) சலுகையுடன் தகுதி உள்ள நோயாளிகளுக்கு மலிவு விலையில் இங்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சிகிச்சை மையம் குறித்து அப்போலோ டயாலிசிஸ் கிளினிக் மூத்த சிறுநீரக மருத்துவர் டாக்டர் D.சுகன் காந்தி M.D., D.M., கூறுகையில், நோயாளிகளுக்கு உகந்த முடிவுகளை உறுதி செய்வதற்கு, இறுதி நிலை சிறுநீரக நோய் போன்ற சிறுநீரக நிலை நோய்களை நிர்வகிப்பதில் உடனடி மற்றும் விரிவான கவனிப்பின் அவசியத்தை அங்கீகரிக்கும் வகையில் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இந்த கிளையில் இருப்பதாக தெரிவித்தார். சரியான நேரத்தில் முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம், சிறுநீரக செயல்பாடு மேலும் மோசமடையாமல் தடுக்க முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், உரிய நேரத்தில் நன்கு பொருத்தப்பட்ட டயாலிசிஸ் சிகிச்சை கருவி மூலம் ஹீமோ டயாலிசிஸ் அல்லது பெரிடோனியல் டயாலிசிஸ் போன்ற உயிர்காக்கும் சிகிச்சைகளை வழங்குவதில் இந்த கிளை மூலம் முக்கிய பங்கு அளிக்க முடியும் என்றும் தெரிவித்தார். உடனடி மற்றும் கவனிப்பு ஆகியவற்றில் விரிவான தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இறுதி நிலை சிறுநீரக நோயால் வாழும் நோயாளிகளுக்கு வாழ்க்கை தரத்தையும், விளைவுகள் இல்லாத ஒரு மருத்துவ முறையையும் அளிக்க முடியும் என்றும் கூறினார்
இந்த புதிய கிளை குறித்து அப்போலோ டயாலிசிஸ் கிளினிக் தலைமை செயல் அதிகாரி திரு எம் சுதாகர் ராவ் கூறுகையில், இந்த புதிய டயாலிசிஸ் மையம் அப்போலோ டயாலிசிஸ் கிளினிக் 25ஆவது கிளை மட்டுமல்லாமல், அனைவருக்கும் சமமான மருத்துவ சேவையை அடைவதற்கான நோக்கமாகும் என்றும் கூறினார். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் கீழ் நோயாளிகளுக்கு இந்த கிளையில் சேவைகளை வழங்குவதன் மூலம், அனைத்து சிறுநீரக நோயாளிகளுக்கும், சிறந்தா முறையில் சிகிச்சை அளிப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட இருப்பதாகவும் கூறினார். எதிர்வரும் நாட்களில் அப்போலோ டயாலிசிஸ் கிளினிக்குகள், மற்றும் இரண்டாவது பிரிவு நகரங்களுக்கு தங்கள் வரம்பை அதிகரித்துள்ளதாக கூறிய அவர், உயர்தர சிறுநீரக பராமரிப்புக்கு தேவையான வசதிகளை எளிதாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் எங்கள் சிகிச்சை முறையை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் வழங்குவதோடு மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கான புரிந்துணர்வை அளித்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை அர்ப்பணிப்பு குணத்தோடு அளிப்பதில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
அப்போலோ டயாலிசிஸ் கிளினிக் :
இந்தியாவில் விரிவான சிறுநீரக பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள மருத்துவமனை என்றால் அது அப்போலோ மருத்துவமனை தான். தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, அசாம், பீகார், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் டெல்லி போன்ற மாநிலங்களில் அப்போலோ டயாலிசிஸ் கிளினிக் சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் நோயாளிகளை பராமரிப்பதிலும் முன்னணியில் உள்ளது. 140க்கும் அதிகமான கிளீனிக்குகளின் செயல்பாடுகள் மூலம் ஹீமோ டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ், பீடியாற்றிக் டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட சிகிச்சைகளை அப்போலோ டயாலிசிஸ் கிளினிக்குகள் மூலம் அப்போலோ நிர்வாகம் செய்து வருகிறது. நோயாளிகளை மையமாகக் கொண்ட பராமரிப்பு, அதிநவீன வசதிகள் மற்றும் அதிநவீன நிபுணத்துவம் கொண்ட மருத்துவ குழுக்களுக்கான நிறுவனமாக சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிப்பதில் அப்போலோ மருத்துவர் குழு மற்றும் நிர்வாகம் உறுதியாக செயல்பட்டு வருகிறது. அப்போலோ டயாலிசிஸ் கிளினிக்குகள் நகர்ப்புறம் மட்டும்மின்றி கிராமப்புற பகுதிகளுக்கும் தங்களது சேவைகளை விரிவுபடுத்தி, தரமான சிறுநீரகக் சிகிச்சையை அளிக்கும் மருத்துவ மையாமகா செயல்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை