சற்று முன்



நியூ இயர் 2025 ஆல்பம் பாடல் இசை டிசம்பர் 31 அன்று வெளியாக உள்ளது !

நியூ இயர் 2025 ஆல்பம் பாடல் இசை டிசம்பர் 31 வெளியாக உள்ளதாகதாகவும், பாடல் வரிகளில் முப்பது வினாடி நடனம் அமைத்து rsgpicturesmusic@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்புவும் சிறந்த நடனங்களை தேர்வு செய்து பாராட்டு, பரிசு வழங்கி கெரவிக்கப்படும் என சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி தெரிவித்துள்ளார்.


சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, நியூ இயரை வரவேற்கும் விதமாக உலக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அனைவரும் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் வரிகளை எழுதியுள்ளேன். அப்பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் டாக்டர் செல்வின் கிறிஸ்டோபர் இசை அமைத்து பாடலை பாடியும் உள்ளார். இன்றைய காலத்திற்கேற்ப மெட்டுக்களை அமைத்து தனது சிறந்த குரலால் பாடியுள்ளார் அவரிடம் அபரிதமான திறமை உண்டு எதிர்காலத்தில் கண்டிப்பாக அவரின் திறமையை உலகறியும், நான் எழுதியுள்ள குப்பையான வரிகளையே சிறப்பான பாடலாக மாற்றியுள்ளார். அவரிடம் புகழ்பெற்ற கவிஞர்கள் கிடைத்தால் எவ்வளவு சிறப்பாக பாடலை உருவாக்குவார் என்பதை நினைத்து பாருங்கள், நியூ இயர் 2025 ஆல்பம் பாடல் இசை வருகிற டிசம்பர் 31 வெளியிட உள்ளேன். உலக மக்கள் அனைவரும் நியூ இயர் 2025 ஆல்பம் பாடலுக்கு ஆதரவளிக்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வேண்டி கேட்டு கொள்கிறேன். 2025 நியூ இயர் பாடலுக்கு சிறப்பாக குழுவினருடனோ, தனியாகவோ முப்பது வினாடி நடனம் அமைத்து rsgpicturesmusic@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்புவும் சிறந்த நடனங்களை தேர்வு செய்து பாராட்டு, பரிசு வழங்கி கெரவிக்கப்படும். இவ்வாறு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை