சற்று முன்



அமரன் திரை விமர்சனம் !

தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி நடிப்பில் அமரன். 

திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி மேஜர் முகுந்தன் அவரது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். 

சிறப்புமிக்க திரைப்படத்தை தயாரித்துள்ளார் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ். 

திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ் குமார்.

திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி 

சிவகார்த்திகேயன் இந்த படத்தில், அவர் மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ வீரராக நடித்திருக்கிறார். கதைபடி, முகுந்த் வரதராஜனுக்கு சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் உண்டு, ஆனால் அதை அடைய அவர் குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார். இதனால், அவர் தன் இலக்கை அடைய பல துன்பங்களை சந்திக்கிறார்.

மேலும், கதை முழுவதும் அவரது மனைவி இந்துவுடன் ஏற்பட்ட காதல், ராணுவத்தில் அவர் செய்த சாதனைகள், குறிப்பாக காஷ்மீரில் அவர் சந்தித்த சவால்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு போகிறது. காஷ்மீரில் நிலவும் பிரச்சினைகள், அதன் பின்னணியில் உள்ள அரசியல் நிலைமைகள் போன்றவற்றை படத்தில் காட்டியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் மிகவும் கம்பீரமான, தைரியமான ராணுவ வீரராக தோன்றி, அவரது நடிப்பில் உணர்ச்சிகளை மிகுந்த திறமையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகை சாய் பல்லவி இந்துவாக வாழ்ந்துள்ளார் அவரது கதாபாத்திரம் மிக நன்றாக உள்ளது. 

இந்து முகுந்தன் மேல் வைத்திருக்கும் காதல் உணர்வு பாசம் அனைத்தும் இப்படத்தின் மூலம் இந்துவை பார்த்தது போல் சாய் பல்லவி காண்பித்துள்ளார் அவரது நடிப்பில். 

இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இயக்குனர் குறிப்பிட்ட இடங்களை நேரடியாக காட்சியமைப்புகள் மூலம் மிக நவீனமாக பிரமிக்க வைக்கும் விதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். முகுந்த் ராணுவத்தில் பணியாற்றிய இடங்களை நேரடியாக காண்பிக்கும் முறையில், அந்த இடங்களில் நிகழ்ந்த ஆபத்தான மற்றும் தியாகப்பூர்வமான நிகழ்வுகளை உணர்த்தியுள்ளார்.

படத்தின் காட்சிகளை ரசிக்கும் போது, வீரர்களின் வாழ்க்கையின் சிக்கலான நிலைகளை நமக்குள் உணர்த்தும் விதத்தில் மனதை நெருடுகிறது. வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் மிக சுவாரஸ்யமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் படத்தைக் கொண்டு செல்லும் இயக்குனரின் திறமையை பாராட்டத்தக்கது.

ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம். 

 திரைப்படம் தேசப்பற்று நம் நாட்டிற்காக போராடும் ஒவ்வொரு ராணுவ வீரர்களுக்கு திரைப்படம் சமர்ப்பணம். 

சல்யூட் 

Rating : 4 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை