சற்று முன்



போகுமிடம் வெகு தூரமில்லை" படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

"போகுமிடம் வெகு தூரமில்லை"  படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், டாப் 4  இல் இடம்பிடித்த  "போகுமிடம் வெகு தூரமில்லை"   திரைப்படம் !!

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்த  "போகுமிடம் வெகு தூரமில்லை"   திரைப்படம் !!

Shark 9 pictures சார்பில்  சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற  "போகும் இடம் வெகு தூரம் இல்லை" திரைப்படம், தற்போது ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படக்குழுவை பாராட்டியுள்ளார். 

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக, 2024 ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில்  கடந்த இப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி  அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. 

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான வேகத்தில், இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அமேசான் தளத்தில் இந்திய அளவிலான டாப் டாப் 4  படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் இப்படம், வெளியான சில நாட்களுக்குள், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி பார்வையாளர்களையும் கவர்ந்திழுத்து, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இப்படத்தினை பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படக்குழுவினரை நேரில் அழைத்து, அவர்களுடன் படம் குறித்து உரையாடி,  விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். படத்திற்குக் கிடைத்து வரும் பாராட்டுக்களும் வரவேற்பும், படக்குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில், இதுவரையிலான  திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

தொழில்நுட்ப வல்லுநர்கள்  விபரம் 

இயக்குநர்: மைக்கேல் K ராஜா

தயாரிப்பாளர்: சிவா கிலாரி (Shark 9 pictures)

இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்

ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்

தொகுப்பாளர்: M.தியாகராஜன்

கலை இயக்குநர்: சுரேந்தர்

ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்

நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்

கிரியேட்டிவ் புரோடியுசர் - விஜய் கவுடா

நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி

மக்கள் தொடர்பு - சதீஸ், சிவா (AIM)


கருத்துகள் இல்லை