சார் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விமல் அவரது நடிப்பில் சார்.
திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் போஸ் வெங்கட்.
கதைக்களம் :
மூன்று தலைமுறை வாத்தியார்களின் போராட்டம் பற்றிய படத்தின் கதை மிக விரிவாகவும் அழகாகவும் இருக்கிறது. 'சார்' படத்தின் கதை, ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான கல்விப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது பெரும் சமூகச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
சரவணன், விமல் மற்றும் சிராஜ் போன்ற கதாபாத்திரங்கள், குறிப்பாக சிராஜின் வில்லனாக மாறும் நடிப்பு, இந்த கதையில் பெரும் மாறுபாட்டை கொண்டு வந்துள்ளது. சாயாதேவியின் நடிப்பு, 'அடியே புட்ட வெச்ச ரவிக்கைக்காரி...' பாடல் மற்றும் சித்துகுமாரின் இசையில் 'படிச்சிக்குறோம்' பாடல் போன்றவை பார்வையாளர்களின் மனதில் நீண்ட நாட்களாக நிலைத்திருக்கும்.
இயக்குனர் போஸ் வெங்கட், கல்வியின் அவசியத்தை தெளிவாக உணர்த்தி, சமூகத்தில் உள்ள அநீதி, அரசியல், மதம் ஆகியவை எப்படி ஆட்சி செய்யும் என்பதையும் பாராட்டும்படியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த கதை சமூக நீதி மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, திரைப்படத்திலும் நன்கு பிரதிபலிக்கிறது.
நடிகர் விமலின் நடிப்பு மிக அற்புதமாக உள்ளது.
இயக்குனர் போஸ் வெங்கட் கதைகளத்தை மிக அழகாக இயக்கியுள்ளார்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.
திரைப்படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை